ரத்த அழுத்தம், புற்றுநோயைகுணப்படுத்தும் முள் சீத்தா!

வைத்தியம்

முள் சீத்தா... இதை காட்டு ஆத்தாப்பழம் என்றும் சொல்வார்கள். கேரளாவில் ஆத்தா சக்கா என்ற பெயரிலும், இலங்கையில் காட்டு ஆத்தா,  அன்னமுன்னா பழம், அண்ணவண்ணா பழம் என்பதுபோன்ற வேறு பெயர்களிலும் அழைக்கிறார்கள். இது ஓர் அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. இந்தப் பழம் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளிலும், கரீபியன் தீவுகள்  மற்றும் மத்திய அமெரிக்காவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பரவலாக விளைகிறது.

அதிகமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட இந்தப் பழமானது உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கக்கூடியது. மன அழுத்தம் மற்றும் நரம்புக் கோளாறுகளை  சரிசெய்வதோடு அனைத்துவிதமான கட்டிகளையும் கரைக்கும் தன்மை கொண்டது. இதய நோய், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சார்ந்த பிரச்னைகளையும் சரிசெய்கிறது. இதன் இலைச்சாற்றில் அசிட்டோஜெனின் என்ற அல்கலாய்டு கூட்டுப்பொருள் இருப்பதால் புற்றுநோயை குணப்படுத்த உதவுகிறது. இதன் இலைகளை கொதிக்கவைத்து அதன் கஷாயத்தை அருந்தினால் இடுப்பு வலி குணமாகும் என்பது பாரம்பர்ய மருத்துவ முறையாகும். இதன் பூக்களை  டீயில் போட்டு கொதிக்கவைத்து அதனுடன் தேன் கலந்து குடித்தால்... சளி, இருமல், நரம்பு சம்பந்தமான நோய்கள் மற்றும் மார்புவலி போன்றவை நீங்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்