புதிதாகத் தொழில் தொடங்குவோருக்கு... தேவையான வழிகாட்டல்கள்!

பிசினஸ் ஸ்பெஷல்!

ன்று சுயதொழில் செய்யும் ஆர்வம் மக்களிடம், குறிப்பாக பெண்களிடம்  அதிகரித்து வருகிறது. தொழில் தொடங்குவது தொடர்பான விரிவான வழிகாட்டல்களை வழங்குகிறார்... சென்னை, கிண்டியில் உள்ள குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு நிறுவனத்தின் உதவி இயக்குநர், ஜே.நவரோஜி புனிதவதி...

தொழிலைத் தேர்ந்தெடுக்கும் முன்..!

‘‘ஒரு தொழிலை, அதில் உங்களின் ஆர்வம், திறன், அந்தத் தொழிலுக்கு உள்ள வரவேற்பு, அதைச் செய்வதற்கான சூழலின் சாத்தியம் போன்றவற்றை பரிசீலித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும். ‘அந்தத் தொழில் ஆரம்பிச்சா சூப்பரா போகும்’ என்ற முரட்டுத்தனமான நம்பிக்கை தவறு. ‘இதெல்லாம் ஒரு தொழிலா?’ என்று நினைக்கும் தொழில்கள் பலவும் மிக அதிக வருமானம் தருவதாக இருக்கக்கூடும். எனவே, தேர்ந்தெடுக்க நினைக்கும் தொழில் பற்றி நன்கு அலசி ஆராய்ந்து பின்னர் அதில் களமிறங்கவும்.

தொழில்முறை மின்சார விநியோகம்!

வீட்டுப் பயன்பாடு, வணிகப் பயன்பாடு என்று இரண்டு வகைகளில் மின்சாரக் கட்டணத்தை அரசு நிர்ணயித்திருக்கிறது. அதிக மின்சாரம் தேவைப்படாத தொழில்களை குடிசைத் தொழிலில் (அந்தந்த மாவட்ட தொழில் மையங்களில்) பதிவுசெய்து வீட்டிலேயே செய்யலாம். வீட்டின் ஒரு பகுதியை மட்டும் தொழிலுக்காகப் பயன்படுத்தும்போது, இதற்கான அனுமதியை, நீங்கள் நிலம் அல்லது வீட்டு வரி செலுத்தும் அலுவலகத்தில்  உரிய அனுமதி பெற்று மின்சார வாரியத்திடம் கொடுத்து ‘கமர்ஷியல் லைன்’னுக்கான அனுமதியைப்  பெறலாம். அதுவே பிரத்யேக தொழிற்கூடங்கள் அல்லது வணிக வளாகங்களில் தொழிலை ஆரம்பிக்கும்போது, ‘கமர்ஷியல் லைன்’ பிரிவின் கீழ் வரும் மின்நுகர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

வங்கிக் கடன், திட்ட அறிக்கை!

தொழிலுக்கான வங்கிக் கடன் பெற, முறை யான திட்ட அறிக்கை அவசியம். அதற்கு...

குறிப்பிட்ட தொழிலை தேர்ந்தெடுத்த தற்கான காரணத்தை வலுவாகச் சொல்ல வேண்டும்.

அது சூழலுக்கு பொருத்தமான தொழிலா, உத்தேச வருமானம், லாபம் என்ன, உற்பத்தித் தொழில் எனில் அதன் சந்தை நிலவரம் எப்படி... என தொழில் சம்பந்தப் பட்ட தகவல்களை விளக்கமாகவும் தெளிவாகவும் குறிப்பிட வேண்டும்.

வீட்டில் இருந்து செய்யக்கூடிய தொழிலா அல்லது தனியாக இடம் பிடித்து ஆரம்பிக்க வேண்டுமா... முதலீட்டு மூலப்பொருட்கள் என்னென்ன, இயந்திரங்கள் வாங்க வேண்டிவருமா என்பது போன்ற வற்றைக் குறிப்பிட வேண்டும். அவற்றை எந்த நிறுவனத்திடம் இருந்து பெறுகிறீர்களோ அவர்களின் முழு விவரம் மற்றும் தொழில் முகவரியைக் குறிப்பிட வேண்டும்.

குறிப்பிட்ட தொழிலில் நீங்கள் பயிற்சி பெற்றிருப்பின், அதற்கான சான்றிதழை இணைக்க வேண்டும்.

திட்ட அறிக்கை தயாரானதும், நீங்கள் வசிக்கும் அல்லது தொழில் தொடங்கவிருக்கும் இடத்துக்கு உட்பட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சமர்ப்பித்து, வங்கிக் கடனைப் பெறலாம். இதில் குறிப்பிடப்பட வேண்டியது, திட்ட அறிக்கையில் தெரிவித்துள்ள தொழிலுக் கான மூலப்பொருட்கள்/இயந்திரங்கள் வாங்க விருக்கும் நிறுவனத்தின் பெயரில்தான் தொகை  தரப்படும். உங்கள் கையில் பணமாகத் தரப் படாது. இதே காரணத்தால், பழைய மெஷின்கள் வாங்குபவர்களுக்கு வங்கிக் கடன் கிடைக்காது. வங்கிக் கடன் நடைமுறைகளும் விதிமுறைகளும், ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும்.

தொழில் பதிவு!

தொழில் நல்ல கட்டத்தில் இருக்கும்போது, சிறு, குறு, நடுத்தர தொழில் செய்வோர் தங்களின் தொழிலை நிரந்தரமாக மத்திய அரசால் கடந்த வருடம்  செப்டம்பர்  மாதம் தொடங்கப்பட்ட Government Udyog Aadhaar memorandum, (UAM) UdyogAadhaar.gov.in என்கிற வலைதளத்தில் பதிவு செய்யலாம். இதில்  தொழிலைப் பதிவு செய்துகொள்வது, தொழில் முனைவோருக்கு நன்மை பயக்கும்.

அதற்கு ஆதார் எண், வங்கிக் கணக்கு எண், வங்கியின் `ஐஎஃப்எஸ்சி கோடு’ மற்றும் மின்னஞ்சல் முகவரி முக்கியம். கட்டணம் எதுவும் இல்லை. இதில் ஒருமுறை பதிவு செய்துவிட்டால் திருத்தங்கள் செய்ய முடியாது என்பதால், தேவையான விவரங்களை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக்கொண்டு நிதானத்துடன் பதிவு செய்யவும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்த பின், அதற்கான சான்றை (அக்னாலெட்ஜ்மென்ட்) பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும். அதில் யாருடைய கையெழுத்தும், ஒப்புதலும் தேவையில்லை. தொழில்முனைவோரின் முதலீட்டு தொகைக்கு ஏற்றபடி குறு, சிறு, நடுத்தர தொழிலா என்பதை அக்னாலெட்ஜ்மென்டில் தெரிந்து கொள்ளலாம். இதில் இரண்டு வகையான பதிவுகள் உண்டு. அவை... உற்பத்தித் தொழில் பதிவு, சேவை தொழில் பதிவு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்