நமக்குள்ளே!

சாலையில் திராவகம் வீசிக் கொலை... ரயில் நிலையத்தில் வெட்டிக் கொலை, வீட்டுக்குள் புகுந்து தீயிட்டுக் கொலை, என தன்னைக் காதலிக்க மறுக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தினம் தினம் நடந்தேறி வருவதைப் பார்க்கும்போது நெஞ்சம் பதறுகிறது. இப்படி அடுத்தடுத்து நடந்துவரும் கொடூரங்களுக்குப் பின்னரும், ‘இதுவும் கடந்து போகும்’ என்ற மனதை தேற்றிக்கொண்டு நகர்ந்துவிடுகிறோம். அல்லது, பொங்கி எழும் நம் கோபக் குரல்கள் குறுகிய காலத்துக்குள்ளேயே அடங்கிவிடுகின்றன. இருந்தாலும், ‘காதல் எப்படி வன்மத்தை வளர்க்கும்?’ என்ற கேள்வி மட்டும் மனதை தொடர்ந்து அரித்துக்கொண்டே இருக்கிறது.

நவீனாக்களின் வாழ்க்கை `திடுதிப்' என்று சடுதியில் முடிந்துவிட இப்படிப்பட்ட ‘காதலே’ காரணமாக இருக்கிறது. நவீனாக்களும் ஸ்வாதிக்களும் இப்படி அடுத்தடுத்து கொல்லப்படுவதற்கு, ‘காதல்’ என்று தவறாக அடையாளப்படுத்தப்படும் வழக்கமேகூட ஒரு வகையில் காரணமாக இருக்குமோ என்று சந்தேகம் எழுகிறது. இன்னும் ஒரு படி மேலே போய் சிந்தித்தால், ‘`காதல் வன்மத்தை தூண்டும் எனில் அந்த நபரின் எண்ணத்தை ‘காதல்’ என்று குறிப்பிடுவதுகூட பெண்களுக்கு எதிரான வன்மமே!” என்று எண்ணத் தோன்றுகிறது. தனக்கு சம்பந்தம் இல்லாத ஓர் ஆணால் சித்ரவதை செய்யப்பட்டு இறந்த நவீனாவின் இறப்பு உறுதி செய்வதும் இந்தக் கருத்தைத்தான்!

எந்த வகையிலும் ‘காதலோடு’ சம்பந்தப்படவில்லை என்றாலும், ‘காதல்’ என்கிற அடையாள மொழியோடு பெண்களைக் கொல்வது காலம்காலமாய் தொடர்ந்து வருகிறது. அன்பில் திளைத்த யாரும் காதல் கொலைகள் செய்வதில்லை. காதலின் உச்சத்தில் உயிர்பலி ஒன்று நிகழும் எனில், அதை இனி காதல் என்று சொல்லாமல் இருக்கப் பழகுவோம்.

உரிமையுடன்,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்