அனுஷா... ஆதிரா... இனியா!

கவிதை அரங்கேறும் நேரம்!டிஜிட்டல் கச்சேரி


 

‘அடிக்கும் காற்றும்
சில்லென்ற சிறுதூறலும்
மனதை ஏதோ பிசைகிறதே!’


என்று  ஃபேஸ்புக்கில் கவிதை ஒன்றை ஆதிரா போஸ்ட் செய்ய, ‘அடடே ஆச்சர்யக்குறி!’ என்று கமென்ட் செய்தாள் இனியா. `வாட்ஸ்அப்'பில் வந்த அனுஷா, ‘ச்சே... பொண்ணு என்னமா ஃபீல் பண்ணுது’ என்று சொல்லிக்கொண்டே அன்றைய சந்திப்புக்கு நேரம் குறிக்க, அன்று மாலை மூவரும் ஆதிரா வீட்டில் ஆஜர் ஆனார்கள்.

‘‘என்ன ஆதிரா... கவிதை களைக்கட்டுதுபோல.?!’’

‘‘கவிதையா, காதலா அனு?’’

‘‘அச்சச்சோ..! ஒரு கவிதை எழுத முயற்சி பண்ணினது தப்பா மக்களே? ஆடிக் காத்தும் மழையும் சில்லுன்னு ஒரு ஃபீல் கொடுக்க, சும்மா ரெண்டு வரி போஸ்ட் பண்ணினேன்? இதுக்குப் போய் இப்படி வெச்சு செய்றீங்களே ரெண்டு பேரும்?!’’

‘‘ஓவர் தன்னடக்கம்மா உனக்கு! நீ படைப்பாளி மட்டுமா, படிப்பாளியும் இல்லையா?!’’

‘‘என்னவாம்..?’’

‘‘மேடம் சிவில் சர்வீஸ் எக்ஸாமுக்கு படிச்சிட்டு இருக்கீங்கள்ல... அதைப் பத்திதான் சொல்றா இனியா!’’

‘‘ஆதிரா... அதெப்படி கவிதையும் எழுதுற, பரீட்சைக்கும் படிக்கிற, அரட்டைக்கும் வந்துடுற? எப்படி நீ இப்படி?!’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்