``உணர்வுபூர்வத்தை ஒதுக்குங்கள்... அறிவுபூர்வமாக அணுகுங்கள்!''

மிழ்நாட்டு ஊடகங்கள் முதல் சர்வதேச ஊடகங்கள்வரை, பல பத்திரிகையாளர்களை, புகைப்படக் கலைஞர்களை உருவாக்கிக் கொடுத்துக்கொண்டிருப்பது, ஆனந்த விகடனின் ‘மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்’. 2016 - 2017 ஆண்டுக்கான திட்டத்துக்கு விண்ணப்பித்த 2,686 மாணவர்களில், பல கட்டத் தேர்வுகளுக்குப் பிறகு 75 பேர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். இதில் 25 பேர் பெண்கள். மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தின் 25-ம் ஆண்டான இவ்வருடம், பெண்களின் எண்ணிக்கை முதல்முதலாக இருபத்தைந்தை எட்டியிருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. புதிய மாணவப் பத்திரிகை யாளர்களுக்கான பயிற்சி முகாம், சென்னையில் ஜூலை 22, 23, 24 தேதிகளில் நடைபெற்றது.

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக பல்வேறு துறை பிரமுகர்களும் பங்கேற்று, தங்களின் அனுபவங்களை முன்வைத்தனர். இவர்களில், ‘நில் கவனி சொல்’ என்ற தலைப்பில் திரை இசையமைப்பாளர்  ‘ஹிப்ஹாப்’ ஆதி பேசியது குறிப்பிடத்தக்க படிப்பினையாக இருந்தது. ‘‘நல்லவிதமாக, கெட்டவிதமாக என நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கான விளைவும், நம்மைப் பின்தொடர்ந்துகொண்டே இருக்கும். அதற்கு என்னையே பாடமாகச் சொல்வேன். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நான் சமீபத்தில் ‘டக்கரு டக்கரு’ பாடல் வெளியிட்டபோது, ‘அதைச் சொல்ல இவன் யாரு? பெண்களை இழிவுபடுத்தி ‘கிளப்புல மப்புல’ பாடலை எழுதினவன்தானே இந்த ‘ஹிப்ஹாப்’ ஆதி?’ என்று என்னை விமர்சித்தார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்