மிஷேல் ஒபாமா... உருக்கிய பேச்சும் உலகளவிலான வீச்சும்!

தாய்மை உணர்வு

மெரிக்காவின் ‘ஃபர்ஸ்ட் லேடி’ மிஷேல் ஒபாமா, அபார பேச்சுத்திறன் கொண்டவர். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலரி கிளின்டனை ஆதரித்து, ஃபிலடெல்ஃபியாவில் மிஷேல் பேசிய பேச்சு, வலிமையாகவும் அதேசமயம் உருக்கமாகவும் இருக்க, அது உலகம் முழுக்க ரசிக்கப்பட்டது. எட்டு வருட வெள்ளை மாளிகை வாழ்க்கையில், ஒரு தாயாக தான் கற்றதும் பெற்றதுமாக அவர் குறிப்பிட்ட விஷயங்கள்... அழகோ அழகு!

`‘வாழ்வின் சவால்களை, ஒரு பொறுப்பான பதவியில் இருக்கும்போது எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை, நானும் ஒபாமாவும் தினமும் எங்கள் குழந்தைகளுக்குத் தொடர்ந்து கூறி வந்தோம். இன்று பதின்பருவப் பெண்களாக வளர்ந்திருக்கும் அவர்களிடம், அவர்களின் தந்தையின் குடியுரிமை மற்றும் நம்பகத்தன்மை குறித்து எழுப்பப்படும் கேள்விகளை புறக்கணிக்க வலியுறுத்தினோம்.

`சிலர் நம்மிடம் கீழ்த்தரமாக நடந்து கொண்டால், நாமும் அவர்களிடம் அப்படி நடக்க வேண்டிய அவசிய மில்லை; எப்போது அவர்கள் கீழிறங்குகிறார்களோ, அப்போது அவர்களை விட நாம் ஒரு படி மேலே போகிறோம் என்பதுதான் உண்மை' என்று பதியவைத்தோம்’’ என்று, ஒபாமா மீதான எதிர்க்கட்சி களின் குற்றச்சாட்டுகள் குறித்து மிஷேல் பேசியது கூட்டத்தின் மரியாதையைப் பெற்றுக்கொடுத்தது.

‘‘பெற்றோராக எங்கள் குழந்தைகளுக்கு நாங்கள் நல்ல ரோல்மாடல்களாக விளங்கினோம். மேலும், எனக்கும் என் கணவருக்கும் தெரியும்... எங்களது வார்த்தைகளும், செயல்களும் எங்கள் குழந்தைகளுக்கான முன்மாதிரி மட்டுமல்ல, ஒட்டுமொத்த அமெரிக்கக் குழந்தைகளுக் கானவை என்று! எனவே, பெற்றோராக மட்டு மல்லாமல் அதிபராக ஒபாமாவும், நாட்டின் ஃப்ர்ஸ்ட் லேடியாக நானும் எங்கள் பொறுப்புகளைச் சரியாகச் செய்துள்ளோம்’’ என்றபோது, அந்த பெரிய அரங்கத்தின் மொத்த கவனமும் மிஷேலின் உரையில் உறைந்திருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்