ஒரு டஜன் யோசனைகள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
திருமண விழா... திருப்தியாக நடந்தேற!

டி மாதம் முடிந்ததும் ஆவணி முகூர்த்தத்தில் பல வீடுகளிலும் `டும் டும் டும்' கேட்கும். உங்கள் இல்லத் திருமண விழா சீரும் சிறப்புமாக நிகழ, ஒரு டஜன் யோசனைகளை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த திருமண ஏற்பாடு நிறுவனமான ‘வெடிங் பன்ச்’சின் உரிமையாளர் பிரபு.

1.மனப்பொருத்தம்... மஸ்ட்!

மணமக்களுக்கு ஜாதகப் பொருத்தத் துடன், மனப்பொருத்தம் பார்ப்பதும் மிகவும் முக்கியம். திருமணத்துக்குப் பின் பெண் மேற்படிப்புப் படிப்பது, வேலைக்குப் போவது, சம்பளத்தை தன் பெற்றோருக்குக் கொடுக்க நினைப்பது குறித்தவற்றை மாப்பிள்ளையிடம் தெரிவிப்பதும்... அப்பா, அம்மாவுடன் சேர்ந்திருக்க வேண்டுமா அல்லது தனிக்குடித்தன ஏற்பாடுகள் இருக்கிறதா போன்றவற்றை மாப்பிள்ளை மற்றும் மணப்பெண்ணிடம் தெரிவித்து உடன்பாட்டுக்கு வரவேண்டியதும் முக்கியம்.

2.மேட்ரிமோனியில் பெயர் நீக்கவும்!

திருமண வலைத்தளங்களில் பதிந்துவைத்திருந்தவர்கள் அதை ரத்து செய்யவும். இல்லை எனில், வரன் குறித்த அழைப்புகள் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

3.செக் லிஸ்ட் போடுங்கள்!

திருமணத்துக்கு வாங்க வேண்டிய பொருட்களில் இருந்து செய்ய வேண்டிய ஏற்பாடுகள் வரை அனைத்தையும் ஒரு நோட்டில் செக் லிஸ்ட் ஆக எழுதிவைத்துக்கொண்டு, ஒவ்வொரு வேலையும் முடிய முடிய அதை டிக் செய்துகொண்டே வரும்போது, எதுவும் விட்டுப்போகாது. அதேபோல, பட்ஜெட் போட்டு செலவுகளை அதற்குள் கொண்டுவரத் திட்டமிடும்போது பதற்றம் குறையும். வீட்டில் யார் யாருக்கு என்னென்ன பொறுப்பு என்று கல்யாண வேலைகளை முன்கூட்டியே பிரித்துப் பங்கிட்டுக்கொண்டால், விரைவில் முடிக்க முடியும்.

4.திருமண அழைப்பிதழ்


பத்திரிகை அச்சாகி வந்தவுடன், யார் யாருக் கெல்லாம் நேரில் கொடுக்க வேண்டும், தபாலில் அனுப்ப வேண்டும் என்ற பட்டியலை... ஊர், ஏரியாவாரியாக எழுதிவைத்துக்கொண்டு, பத்திரிகை கொடுக்க கொடுக்க அதில் டிக் செய்து கொண்டே வரவும். தபாலில் அனுப்பியவர்களை தொலைபேசியில் ஒருமுறை அழைத்து பத்திரிகை கிடைக்கப்பெற்றதை உறுதிசெய்துகொள்வதும், வரவேற்பதும் நன்று. பத்திரிகையை `வாட்ஸ்அப்' கார்டாகவும் வடிவமைத்துக் கொண்டால், கடைசி நேரத்தில் பத்திரிகை சென்று சேராதவர்களுக்கு உடனடியாக அலைபேசி வழியாக அனுப்பி அழைக்க வசதியாக இருக்கும்.

5.மண்டபம்

திருமண மண்டபத்தைப் பொறுத்தவரை ஆடம்பர அலங் காரம் என்பதைவிட, பட்ஜெட்டுக்கு ஏற்ற அலங்காரம் என்றவாறு இருக்கட்டும். விருந்தினர் தங்குவதற் கான ஏற்பாடுகளை அருகிலேயே மேற்கொள்வது சிரமங்களைத் தவிர்க்கும்.

6.புகைப்படம்

திருமணத்துக்கான புகைப்படக் கலைஞரைத் தேர்ந்தெடுக்கும்போது, அவர் இதற்கு முன்னர் எடுத்த ஆல்பங்களைப் பார்த்துவிட்டு முடிவு செய்யவும். குடும்பப் புகைப்படம், கப்பிள் புகைப்படம், நண்பர்கள் புகைப்படம் என உங்களுக்கு எந்தவிதமான புகைப்படங்கள் வேண்டும் என்பதை, ஆன்லைனில் மாதிரிப் படங்களை டவுன்லோடு செய்து அவரிடம் கொடுத்து முன்கூட்டியே சொல்லி வைக்கலாம்.

7.தங்கம் தவிர்க்கவும்!

மணப்பெண்ணுக்கு முகூர்த்த நாளில் கூடுமான வரை தங்க நகைகள் தவிர்த்து அலங்கார இமிட்டேஷன் செட் நகைகள் அணிவிக்கலாம். இல்லை எனில், ஒவ்வொரு நகைப் பெட்டியாகத் திறந்து ஆரம், நெக்லஸ், வளையல், கம்மல் என நகை பூட்டும்போது, முகூர்த்த நேரம் நெருங்கும் பதற்றத்தில் அது தொலைந்து போவதற்கோ, கூட்டத்தில் யார் கண்ணையேனும் உறுத்தி திருடுபோவதற்கோ வாய்ப்புகள் உண்டாகிவிடும்.

8.ஆடைகள்

திருமண மற்றும் ரிசப்ஷன் பிளவுஸ்களை வாடிக்கை யான டெய்லரிடம் கொடுப் பதே நலம். அளவில், வடி வமைப்பில் மாறுபாடு இருக்காது என்பதுடன், உங்களின் அவசரத் தேவைக்கு கைகொடுப்பார். புதிதாக ஒருவரிடம் கொடுக்கும் பட்சத்தில் திருமண நாளுக்கு முதல் நாள் என்று கெடு வைத்துக்கொள்ளாமல், குறைந்தபட்சம் ஒரு வாரம் முன்கூட்டியே வாங்கி அளவு, வடிவமைப்பில் திருத்தங் கள் இருந்தால் மீண்டும் கொடுத்து சரிசெய்து வாங்கிக்கொள்ளவும். இப்போது பிளவுஸ் பேட்டர்ன் களுக்கு என நிறைய ஆப்ஸ் வந்துள்ளன... பயன்படுத்திக் கொள்ளலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்