லப்டப் ஆப்ஸ்!

ஸ்மார்ட்போன் கீபேடில் லவ் வளர்க்கும் இந்த ஜென் நெக்ஸ்ட் தலைமுறைக்காகவே வந்திருக்கும் லப்டப் லவ் ஆப்ஸ் இங்கே!

லவ் கொலாஜ் (LOVE COLLAGE)

உங்கள் பார்ட்னர் பிறந்தநாளுக்கு ரொமான்டிக்காக இம்ப்ரஸ் செய்யும் புரொஃபைல் பிக்சர் வேண்டுமா? இல்லை... கொலாஜ் செய்து போட்டோ ஃப்ரேம் பரிசளிக்க வேண்டுமா? இருக்கவே இருக்கிறது லவ் கொலாஜ் ஆப். உங்கள் இருவரின் போட்டோக்களையும் உள்ளிட்டு ‘புராசஸ்’ கொடுத்தால்... விதவிதமான ஸ்டைலில் ஸ்டிக்கர், கிராஃபிக்ஸுடன் போட்டோ கொலாஜ் ரெடி!

லவ் டிப்ஸ் (LOVE TIPS)

லவ்வரை எப்படி எல்லாம் இம்ப்ரஸ் செய்யலாம், பியூட்டிஃபுல் புரபோசல் வழிகள், அவர் எந்த மூடில் இருந்தால் எப்படி அப்ரோச் செய்ய வேண்டும்,   என்னவெல்லாம் சர்ப்ரைஸ் கொடுக்கலாம்... என மொத்த லவ் கைடு புக் ஆக இருக்கிறது, லவ் டிப்ஸ் ஆப். ‘இன்னிக்கு அவன்கிட்ட இதைப் பத்தி நான் எப்படி பேசுறது..?’ என்று யோசனை கேட்டால், உங்களை ஜம் என்று தயார்செய்து அனுப்பிவைக்கும் இந்த ஸ்மார்ட் செயலி!

கப்ளிட் (COUPLETE)

இதுவும் காதலன், காதலி இருவருக்குமான ஆப்தான். இதில் இருவரும் பெர்சனலாக சாட் செய்து கொள்ளலாம். விஷ் லிஸ்ட் போட்டுக்கொள்ளலாம். உதாரணமாக, இந்த வாரம் டின்னர் போகவேண்டும் என்று விஷ் லிஸ்ட் போட்டுக்கொண்டால்... நீங்கள் இருக்கும் ஏரியாவில் உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற காபி ஷாப் முதல் ரெஸ்டாரன்ட்வரை இந்த ஆப் லிஸ்ட் காட்டும். இதில் உள்ள ஆட்டோமேட்டிக் கேலண்டரில் முக்கிய தினங்களைக் குறித்துவிட்டால், அலாரம் எழுப்பி காதலிக்க விரட்டும்!

லவ் ஸ்டிக்கர்ஸ் (LOVE STICKERS)

கண்ணடிப்பதில் இருந்து தூக்கி அடிப்பதுவரை இப்போது அனைத்துக்கும் ஸ்மைலி வந்துவிட்டது. `சாட்'டில் டெக்ஸ்ட் மெசேஜைவிட ஸ்மைலி மெசேஜ்தான் அதிகம். ‘ஸ்மைலி வார்’ கூட நடக்கும். இப்படிப்பட்ட ஸ்மைலி பிரியர்களுக்கானதுதான், லவ் ஸ்டிக்கர்ஸ் ஆப்! வார்த்தையே தேவையில்லை... காதலைச் சொல்ல கோடிக்கணக்கான ஸ்டிக்கர்ஸ் உள்ளன இதில். சின்ன ஸ்மைலியில் ஆரம்பித்து பெரிய ரொமான்ஸ்வரை... ஸ்டிக்கரே சரணம்!

காதலர்கள் டப்டப் என்று டைப் அடிக்கும் போனுக்கு வேண்டும்தானே இந்த லப்டப் ஆப்ஸ்..?!

கபிள் – ரிலேஷன்ஷிப் (COUPLE  –  RELATIONSHIP)

இது காதலன், காதலி இருவருக்குமான ஆப். இதில் இருவரின் மொபைல் எண்களையும் பதிவுசெய்துகொள்ள வேண்டும். உங்கள் பார்ட்னரின் பிறந்தநாள், முதன் முதலில் புரொபோஸ் செய்த நாள், இருவரும் இணைந்து முதன் முதலில் அவுட்டிங் சென்ற நாள் என காதலின் ஆனிவர்சரி கொண்டாட்ட தேதிகள் போன்றவற்றை இது இருவருக்கும் ரிமைண்டர் கொடுத்துக்கொண்டே இருக்கும். ‘இன்னிக்கு என்ன நாள் தெரியுமா? அதைக்கூட நீ மறந்துட்டே இல்ல...’ என்ற சண்டைக்கு அவசியமில்லாமல் செய்யும். மேலும், இருவரின் பர்சனல் சாட், படங்களை இந்த `ஆப்'பில் ஸ்டோர் செய்து கொள்ளலாம். ஹைலி கான்ஃபிடன்ஷியல்!

 தா.நந்திதா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick