அடடே... அப்படியா?!

முதல் மோஷன் பிக்சர் (நகரும் திரைப்படம்), ஒரு ரயில், ஸ்டேஷனுக்குள் செல்வதைப்போல் காட்டப்பட்டது. அப்போது பார்வையாளர்கள் பலரும், ரயிலில் சிக்கிவிடுவோமோ என்று பயந்து மயக்கமடைந்தனர்.

`டெலிபோனைக் கண்டுபிடித்தவர் யார்' என்ற கேள்விக்கு கிரகாம் பெல் என்றுதான் பதில் வரும். டெலிபோனை முதலில்கண்டுபிடித்தவர் அமெரிக்கர் எலிஷா கிரே.  ஆனால்,பெல் தனதுகண்டுபிடிப்பை எலிஷாவுக்கு இரண்டு மணி நேரம் முன்னரே பதிவு செய்துவிட்டதால், பெல் பெயர் வரலாற்றில் நிலைத்தது.

எகிப்தில் இறந்துபோன மனிதர்களை மட்டும் அல்ல... நாய்கள், பூனைகளையும் `மம்மி'களாக்கி (உடலைப் பதப்படுத்தி) அதன் எஜமானர்களுடன் சேர்த்துப் புதைத்தனர்.

ஐரோப்பாவில் துறவிகள் காலை பிரார்த்தனைகள் செய்வதற்கு  சீக்கிரம் எழுந்திருக்க, 1300-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது அலாரம்.

வானத்தின் நிறம் நீலம் என்பது குழந்தைக்குக்குக்கூடத் தெரியும். ஆனால், வீனஸின் (வெள்ளி) ஆகாயம் நீல நிறத் தைத் தடுக்கும் தன்மை வாய்ந்தது. நீங்கள் வீனஸில் நின்று மேலே பார்த்தால், வானம் சிவப்பு நிறத்தில் தெரியும்.

 தா.நந்திதா 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick