கலங்காதிரு மனமே!

கல்வியும் சேவையும் தருமே மனநிறைவு!

‘‘எஸ்.எஸ்.எல்.சி முடித்ததோடு எனக்குத் திருமணம் நடந்து முடிந்தது. இன்று 10 டிகிரி, இரண்டு பிஹெச்.டி முடித்து, பேராசிரியையாகப் பணிபுரிகிறேன். திருமணத்துக்குப் பின் டிகிரி என்பது, அதிசயம் எதுவும் இல்லை... தேவை, ஆர்வம் மட்டுமே!’’

- வாழும் உதாரணமாகப் பேசினார், சென்னையைச் சேர்ந்த பேராசிரியை அகிலா சிவசங்கர்.

‘‘17 வயதில் திருமணமாகி... சென்னை, கோட்டூர்புரத்தில் குடியேறினேன். எனக்கு படிக்கும் சுதந்திரம் கிடைத்தது. தற்போது 58 வயதாகும் நான் இரண்டு பி.ஏ., ஏழு எம்.ஏ., ஒரு எம்ஃபில் மற்றும் இரண்டு பிஹெச்.டி-க்களை முடித்திருக்கிறேன். இன்றும் படித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

தற்போது சென்னை, பெட்ரீஷியன் கல்லூரியில் மொழித்துறை தலைவராகப் பணிபுரிகிறேன். இரண்டு முறை ஜனாதிபதியிடம் சிறந்த பேராசிரியைக்கான தேசிய விருதினை வென்றது, மிகவும் சந்தோஷமான தருணங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்