"ஐந்து பேருடன் ஆரம்பித்த மருத்துவமனை!"

சேவை

புற்றுநோய் சிகிச்சைக் கான மருத்துவச் சேவைக்குத் தன்னை ஒப்படைத் தவர், டாக்டர் சாந்தா. ஏற்கெனவே `மகசேசே’, `பத்மஸ்ரீ ’, `பத்மபூஷண்’ என தேசத்தின் உயர்ந்தவிருந்துகள் பெற்றவர், இம்முறை சேவைக்கான இன்னொரு வாழ்த்தாக, வணக்கமாக அறிவிக்கப் பட்டிருக்கிறது `பத்ம விபூஷண்’ விருது. பூங் கொத்துகள் நிறைந்த அறையில், எளிமையுடன் வரவேற்றார் டாக்டர்.

‘‘1955-ம் ஆண்டு.டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, அப்போது அமெரிக்காவில் இருந்த தன் மகன் டாக்டர். கிருஷ்ணமூர்த்தியை  இந்தியாவுக்கு  அழைத்து, தன் அன்புக் கட்டளை யாகத் தொடங்கச் சொன்னதே இந்த ‘அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்’. டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, நான், இரண்டு செவிலியர்கள், ஒரு டெக்னீஷியன் என அப்போது ஐந்து பேர் மட்டுமே இருந்தோம். ஒரு பேஷன்ட் வந்தால், கேஸ் ரெக்கார்டு எழுதுவதில் இருந்து, ரத்தப் பரிசோதனை வரை எல்லா வேலைகளையும் நாங்களே செய்வோம். மொத்தமே 12 படுக்கைகள்தான். முதன்முதலில் புற்றுநோயியல்துறை (ONCOLOGY) என்பதே கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் பத்து வருட காத்திருப்புக்கும் அலைச்சலுக்கும் பிறகேதான் கிடைத்தது. புற்றுநோய்க்கான சிகிச்சையில் இன்றுவரை அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட் முன்னோடியாக இருப்பதில், மகிழ்வும் பெருமையும். 

‘புற்றுநோயை, இன்றைய நவீன உலகின் லைஃப்ஸ்டைல் டிஸார்டர் நோய் என்கிறீர்கள். ஆனால், அந்தக் காலத்திலும் இந்நோய் இருந்திருக்கிறதுதானே’ என்று சிலர் கேட்பார்கள். புற்றுநோயில் ஒரு வகை, பரம்பரை பரம்பரையாக வருவது. இன்னொன்று, பரம்பரையுடன் நம் வாழ்க்கை முறையும் சேர்ந்து ஏற்படுத்துவது. இதில், இரண்டாவது வகை இன்று அதிர்ச்சியளிக்கும் வகையில் பெருகிவருகிறது. உதாரணமாக, முன்பு நம் நாட்டில் பெருங்குடல் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது. ஆனால், கடந்த நான்கைந்து வருடங்களில் அது முதல் 10 புற்றுநோய்களுக்குள் இடம்பிடித்திருக்கிறது. கடைகளில் வாங்கி விரும்பிச் சாப்பிடும் பழக்கம், ஃபாஸ்ட்புட், ஜங்க் ஃபுட் இவை எல்லாம்தான் காரணம்!’’

- விருதுக்கான சந்திப்பிலும் புற்றுநோய் விழிப்பு உணர்வைத் தருகிறார் டாக்டர்.

அதுதான் சாந்தா!

மு.சித்தார்த், படம்: மா.பி.சித்தார்த் 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick