அழகு... சில நிமிடங்களில்!

பியூட்டி

 ``திங்கள் முதல் சனி வரை வீட்டு வேலை, ஆபீஸ், காலேஜ் என்று நிற்க நேரமில்லாமல் ஓடினாலும், சண்டே சில நிமிடங்கள் செலவிட்டால் சருமம், கூந்தல், கண்கள், பாதம் என அழகு சார்ந்த பிரச்னைகளை நிவர்த்திசெய்து மீளலாம்’’ என்று சொல்லும் சென்னை, பேர்ல்ஸ் பியூட்டி சலூனின் உரிமையாளர் முத்துலட்சுமி தரும் ஹோம்மேட் பியூட்டி டிப்ஸ் இங்கே!
முகம் பளிச்சிட...

 வெயில் மற்றும் தூசியினால் முகம் வறண்டு காணப்படுபவர்கள் ஒரு டீஸ்பூன் பாலேட்டில் அரிசி மாவு கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்து கழுவ, முகம் பொலிவு பெறும்.

 சருமச் சுருக்கங்களுக்கு சிறிதளவு கடலை மாவில் ஆலிவ் ஆயில் அரை டீஸ்பூன், வெண்ணெய் அரை டீஸ்பூன் சேர்த்துக் கலந்து பேக் போட்டுக் கழுவ, சுருக்கங்களுடன் கரும்புள்ளிகளும் குறையும்.

 ஆயிலி ஸ்கின் உடையவர்கள் தினமும் 3 முதல் 5 முறை முகத்தை வெறும் நீரால் கழுவுவது சிறந்தது. அப்படிக் கழுவும்போது குளிர்ந்த நீரில் ஒருமுறை, வெதுவெதுப்பான நீரில் ஒருமுறை என மாறி மாறிக் கழுவ, எண்ணெய் சுரப்பு குறையும்.

 ஆய்லி ஸ்கின்னுக்கு கடலை மாவு 100 கிராம், பாசிப்பயறு மாவு 100 கிராம், மஞ்சள்தூள் 10 கிராம் ஆகியவற்றுடன் பால் சேர்த்துக் கலந்து முகத்தில் பேக் போட்டு காய்ந்தவுடன் கழுவ, முகம் எண் ணெய்ப் பசையில் இருந்து மீளும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்