ஹைய்யா ஜாலி... ஒல்லி பெல்லி மிக்ஸ் - மேட்ச்!

மினிமம் செலவில் செம பியூட்டி ஃபீல் கொடுக்கும் ’டாப் அண்ட் லெகிங்ஸ்’ காம்பினேஷன் உடுத்திக்கொள்ள சுலபமாக இருப்பதாலேயே கேர்ள்ஸ் மத்தியில் இதற்கு எப்பவும் `டபுள் டிக்'தான்! டாப் - லெக்கிங்ஸ் வாங்கும் முன் எப்படி செலக்ட் பண்றதுனு தெரிஞ்சிக்கலாமே ஃப்ரெண்ட்ஸ்!

 பாயின்ட் நம்பர் ஒன் என்னன்னா... நம்மோட நிறம்

 மற்றும் உடல்வாகு எப்படி இருக்குனு முதல்ல மைண்ட்ல வெச்சுக்கணும்.

 டார்க் கலர் ஸ்கின் டோன் இருக்கறவங்க லைட் கலர் இல்லாமல் டார்க் கலரில் டிரெஸ் போடுறதுதான் இப்போ ட்ரெண்ட். இப்படி அணிவதால், டார்க் கலர் ஷேட் இன்னும் பக்காவா இருக்கும்.

 மாநிறம் உடையவர்கள் பிரைட் அல்லது லைட் கலர் பயன்படுத்தலாம்.

 உயரமாகவும் மற்றும் பருமனான  உடல்வாகு இருந்தால் `கான்ட்ராஸ்ட்' கலர் காம்பினேஷன் அணியலாம்.

 உயரம் குறைவாக உள்ளவர்கள் டாப் அண்ட் லெகிங்ஸ் ஒரே நிறத்தில் மேட்ச் ஆகும்படி அணியலாம். ஷார்ட் ஒப்பன்லெஸ் டாப் அணிந்தால் இன்னும் பெர்ஃபெக்ட்டா இருக்கும்.

 ஸ்கின் கலர் லெகிங்குக்கு, ஃப்ராக் டைப் குர்தி எடுப்பாக இருக்கும்.

அதெல்லாம் சரி... ஒரே லெக்கிங்கை ரெண்டு மூணு டாப்ஸ்க்கு மாத்தி மாத்தி யூஸ் பண்ணி காசை எப்படி மிச்சப்படுத்துறதுனு கேக்கறீங்களா? உங்களுக்காகத்தான் இங்கே சில மிக்ஸ் - மேட்ச் அணிந்த மாடலின் படங்களைக் கொடுத்திருக்கோம்.

 

அப்புறம் என்ன? இந்த நியூ இயருக்கு உங்க வீட்ல செம கலர் கலெக்‌ஷன்ஸ் இருக்கும்தானே

யுவஸ்ரீ படங்கள்:எம்.உசேன், ஓவியம்:சாய்
மாடல்: பிரித்திகா உதவி: ரோஷன் க்ளோத்திங், சென்னை

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick