Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

Google குறும்புகள்!

நெட் உலகின் நாயக னாக நிதம் ஒரு அவதாரம் எடுக்கும் கூகுளின் முகப்பு, மிகவும் எளிமையாக தோற்ற மளிப்பதன் காரணம் தெரியுமா? நம்புங்கள்... கூகுள் நிறுவனத்தைத் தொடங்கிய லார்ரி பேஜ் மற்றும் செர்கெய் பிரின் இருவருக்கும் தொடக்கத்தில் புரோகி ராமிங்கின் அடிப்படையான HTML தெரியாது. அதனால் அப்படியே வெற்றுப்பக்கமாக விட்டுவிட்டனர். இன்று அந்த வெற்றுப்பக்கமே கோடிக்கணக்கானோரின் வெற்றிப்பக்கங்களாக மாறி இருக்கிறது. முகப்பில் தொடங்கும் இந்தப் புதுமை கூகுளின் ஒவ்வொரு அணுவிலும் பிரதிபலிக்கிறது. இதன் தேடுதல் களம் 123 மொழிகளில் வலம் வருகிறது. கூகுள் மட்டுமின்றி அதன் வாடிக்கையாளர்களுக்கும் வெறும் தேடுதல் இன்ஜின் போரடித்துப் போகவே, ’கூகுள் ஸ்பெஷல்’ குறும்புகளைத் தேடுதலில் புகுத்தி கூகுள் உலவவிட்டிருக்கிறது. அவற்றுள் சில இங்கே...

அடாரி ப்ரேக் அவுட் (Atari Breakout)

ப்ரேக் அவுட் என்பது அடாரி என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு விளையாட்டு. அதன் பிரதி பிம்பமாக விளங்கும் இந்த கேமை, கூகுள் இமேஜஸில் Atari Breakout எனத் துழாவினால் பெறலாம். அந்தத் தேடுதல் பக்கத்தில் வரும் படங்கள் அனைத்தும் சில விநாடிகளில் சிறிதாகி, ஒவ்வொன்றும் ஒவ்வொரு கல்லாக மாறி சுவர் ஒன்றை அமைத்துவிடும். பின்னர் ஸ்க்ரீனின் கீழே ஒரு பந்தும் ஒரு தட்டும் தோன்றும். அந்த பந்தைக்கொண்டு சுவர் கற்களை உடைக்கும் ஒவ்வொரு நொடியிலும், கீழே விழும் பந்தினை தட்டில் இருந்து நழுவாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவற்றில் முதல் இரண்டை (Google Gravity, Elgoog) தவிர மற்றவை யாவும் ஈஸ்ட்டர் எக்ஸ் (Easter Eggs) எனப்படுகின்றன. அதாவது, அந்தந்த வெப்சைட்களை புரோகிராம் செய்யும்போதே அவற்றின் கோட்களில் (Code) இத்தகைய ஃபங்ஷன்கள் மறைமுகமாக பதிவு செய்யப்பட்டுவிடும்.

நீங்க இன்னும் செய்யுங்க கூகுள்!

எல்கூக் (Elgoog.im – Google Mirror)

கூகுளின் பக்கங்களைக் கண்ணாடியில் பிரதிபலிப்பது போன்ற முன்-பின் முரணான காட்சியாக காண்பதற்கு இது வகை செய்துகொடுக்கிறது. சீனாவில் ஒருமுறை கூகுள் தடை செய்யப்பட்டபோது அதன் கண்ணாடி வெர்ஷனான எல்கூக் அதிகமானோரால் பயன்படுத்தப்பட்டது. இதை அறிந்த சீன அரசாங்கம் பின்னர் தடையை நீக்கியது.

கூகுள் கிராவிட்டி (Google Gravity)

புவியீர்ப்பு விசையின் தாக்கத்தை, கூகுள் குரோம் பக்கங்களில் காணலாம்! Google Gravity என்று இதன் தேடுதல் திரையில் டைப் செய்தால் வரும் `லிங்க்’கை கிளிக் செய்ய... நீங்கள் காண்பது தொழில்நுட்பத்தின் விஸ்வரூபம். கூகுளின் முகப்பில் உள்ள அனைத்து ஐகான்களும் புவியீர்ப்பு விசையை நோக்கி சரியத் தொடங்கிவிடும். கீழே விழுந்து கிடக்கும் ஒவ்வொன்றையும் இம்மி பிசகாமல் இன்னும் நீங்கள் பயன்படுத்தலாம். இப்போது சர்ச் செய்து வரும் தேடுதல் பக்கமும் சில விநாடிகளில் சரிந்து விழுவது நிச்சயம்.

ஜெர்க் ரஷ் (Zerg Rush)

Starcraft என்ற கேமில் இருந்து தோன்றிய Zerg என்னும் சொல் கூகுளின் செல்லப்பிள்ளை. Zerg எனப்படும் வேற்றுகிரக ஜந்துக்கள் தங்கள் வழியில் குறுக்கிடுபவர்களை தங்கள் ராணியுடன் சேர்ந்து துவம்சம் செய்வதே அதன் கதைச்சுருக்கம். கூகுளில் இது Zerg Rush. கூகுளின் வெப் பேஜில் Zerg Rush என்று தேடினால் வரும் தேடல் பக்கத்தை சில நொடிகளில் பல ஜீரோக்கள் கடித்து தின்னத் தொடங்கிவிடும். பின் எப்படி அந்த பக்கத்தை படிப்பதாம்? ஒவ்வொரு ஜீரோவாக தேடித் தேடி க்ளிக் செய்து ‘கொல்ல’ வேண்டும். ஒவ்வொரு ஜீரோவும் மூன்று முறை க்ளிக்கினால் மட்டுமே சாகும்.

டூ எ பேரல் ரோல் (Do a barrel roll)

தலை சுற்றுகிறதா? `உங்கள் தலை நோவானேன்... நானே சுற்றுகிறேன்!’ என்று இதற்கும் க்ரீன் சிக்னல் காட்டுகிறது கூகுள். நீங்கள் எதுவும் மெனக்கெட வேண்டாம். Do a barrel roll என்று கூகுளின் வெப் பக்கத்தில் தேடினால் போதுமானது. வரும் கூகுள் பக்கம் தானாக வலப்பக்கம் நோக்கி உருளும். இது 1997-ல் வெளிவந்த StarFox64 என்னும் வீடியோ கேமில் இருந்து எடுக்கப்பட்டது. அதில் கதாநாயகன், ஆபத்து நெருங்கினால் பேரல் ரோல் செய்து தப்பித்துக் கொள்வான்.

கூகுள் பிட்ஸ்!

இன்டர்நெட் பயன்படுத்தும் ஒவ்வொரு நபரும் ஒருமுறையேனும் கூகுளை பயன்படுத்திவிடுகின்றனர்.

 மனிதன் இதுவரை 50 பேட்டபைட் (Petapyte) அளவிலான எழுத்துப் பதிவுகளை இயற்றியுள்ளான். கூகுள் ஒவ்வொரு நாளும் புராசஸ் செய்யும் பதிவுகளின் அளவு 20 பேட்டபைட். (1 பேட்டபைட் = 1,00,00,00,00,00,00,000 பைட்கள்).

 கூகுளின் 50 பில்லியன் பக்கங்களை நிமிடத்துக்கு ஒன்று என்று பார்த்தால் முழுவற்றையும் பார்த்து முடிக்க 95,116 வருடங்கள் ஆகுமாம்.

 கூகுளை நாள்தோறும் தரிசிக்கும் நபர்களின் எண்ணிக்கை சராசரியாக 62,00,00,000.

 கூகுளில் வேலையில் அமர கிட்டத்தட்ட 29 நேர்காணல்களைக் கடக்க வேண்டும்.

ஒவ்வொரு நேர்காணலும் மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நீளும்.

ஸ்ரீ.தனஞ்செயன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!
'தனியே... தன்னந்தனியே!'
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“விஷாலுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய கடமை எனக்கிருக்கு!”
Advertisement
[X] Close