மெகா பரிசுப் போட்டி!

ஹாய் வாசகிகளே!

வள் விகடன் 18-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி உங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் விதம்விதமான 18 போட்டிகள்...  இந்த இதழ் மற்றும் இன்னும் ஒரு இதழுக்கு தொடரப் போகிறது. இதுவரை 12 போட்டிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றன. அடுத்த 3 போட்டிகளுக்கான அறிவிப்புகள் இதோ...

போட்டிக்கான விதிமுறைகள்

இது அதிர்ஷ்டப் போட்டியல்ல... திறமையாளர்களுக்கே பரிசுகள் வழங்கப்படும். ஆசிரியரின் தீர்ப்பே இறுதியானது. ஒருவர் எத்தனை போட்டியில் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். போட்டி தொடர்பாக வேறு கடிதப் போக்குவரத்து தேவையில்லை. படைப்புகளைத் திருப்பி அனுப்ப இயலாது. எனவே நகல் எடுத்துக்கொண்டு அனுப்பி வைக்கவும்.

13. என்னால் ஏற்றம்பெற்ற என் குடும்பம்

சாதாரண நிலையில் இருந்த உங்கள் குடும்பத்தை (பிறந்த அல்லது புகுந்த வீடு), இன்று நல்ல நிலைக்கு உயர்த்தியவரா நீங்கள்? இதற்காக நீங்கள் கடந்து வந்த பாதையை விரிவாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் எழுதி அனுப்புங்கள். உங்களின் உன்னதமான முயற்சி, பலருக்கும் உந்துசக்தியாக, வழிகாட்டியாக விரிந்தால்... உங்களுக்குக் காத்திருக்கிறது தங்கப் பரிசு!

14. மெகந்தி

உங்களின் வலது அல்லது இடது கையில் (முழங்கை வரை) மெகந்தி போட வேண்டும். எந்த வகையான மெகந்தியாக இருந்தாலும் நன்று. ஆனால், எக்காரணம் கொண்டும் மெகந்தி ஸ்டிக்கரை பயன்படுத்தக் கூடாது. மெகந்தியை கலர்கள் கொண்டும் அலங்கரிக்கலாம். மெகந்தியை நீங்களே போட்டுக்கொள்ளலாம் அல்லது மற்றவருக்கு போட்டுவிடலாம். எப்படியிருந்தாலும் அதை போட்டோ எடுத்து எங்களுக்கு அனுப்ப வேண்டும். மெகந்தியை நீங்களே போடுவதை போட்டோ உறுதிபடுத்துவதாக இருக்க வேண்டும். கொள்ளைகொள்ளும் அழகுடன் கைகளை அலங்கரிப்பவருக்கு காத்திருக்கிறது தங்கப்பரிசு!

15. அண்ணன் - தங்கை /அக்கா - தம்பி / அப்பா - மகள்

உங்களின் அண்ணன், தம்பி அல்லது அப்பாவுடன் பாசம், மகிழ்ச்சி மற்றும் நெகிழ்ச்சி பொங்கும் தருணங்கள் எத்தனை எத்தனையோ உங்கள் நெஞ்சுக்குள் புதைந்து கிடக்கும். அதையெல்லாம் உருகி உருகி எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். தங்கையாக, அக்காவாக, மகளாக அதையெல்லாம் அனுபவித்து எழுதுங்கள். அண்ணன், தம்பி அல்லது அப்பா என மூன்று தலைப்பில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று தலைப்புகளிலுமே ஒருவர் எழுதி அனுப்பலாம். ஆனால், ஒவ்வொன்றையும் தனித்தனியாக எழுதி அனுப்ப வேண்டும். அண்ணன்/தம்பி/அப்பாவுடன் சேர்ந்திருக்கும் புகைப்படங்களையும் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி,

‘அவள் விகடன்’, 757, அண்ணா சாலை, சென்னை-2

போட்டி 13, 14, 15 ஆகியவற்றுக்கான படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 18.1.2016


கடந்த 15/12/2015 இதழில் அறிவிக்கப்பட்ட போட்டிகள்...

10. கவிதைப் போட்டி

‘பயணம் என்கிற தலைப்பில் 20 வரிகளுக்கு மிகாமல் ஒரு கவிதையை எழுதி அனுப்பவும்.

11. க்ளிக்

ஸ்ட்ரீட் போட்டோகிராஃபி என்கிற தீமில் புகைப்படம் எடுத்து எங்களுக்கு அனுப்ப வேண்டும். உதாரணத்துக்கு தெருவோர தள்ளுவண்டி வியாபாரி, கோயில் தெருக்களில் ரசிக்கும்படியான ஒரு காட்சி, அதிகாலை தெருக்கூட்டும் பெண் என்று பலவாறு இருக்கலாம்.

12. நானும் அவளும் /அவனும்!

திருமணம், கல்வி, தொழில் என உங்கள் வாழ்க்கையின் ஏதாவதொரு முக்கிய அத்தியாயத்தில் பெரும்பங்காற்றி, உங்களின் வெற்றிக்கு வித்திட்ட உங்கள் இனிய தோழி அல்லது தோழன் குறித்த நிகழ்வு மற்றும் உங்கள் இருவரின் புகைப்படத்தையும் எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் வெற்றிக்கு, இந்த நட்பு துணைபுரிந்திருக்க வேண்டியது முக்கியம்.

போட்டி 10, 11, 12 ஆகியவற்றுக்கான படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 6.1.2016.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick