மருத்துவம்

'பெரும்பாடு' போக்கும் வில்வம்!

வில்வம் சக்திவாய்ந்த மூலிகைகளுள் ஒன்று. சாதாரண காய்ச்சலில் தொடங்கி புற்றுநோய் வரை குணப்படுத்தும் வல்லமை படைத்தது. ஒரு கைப்பிடி வில்வ இலையுடன் சுக்கு, மிளகு, சீரகம் தலா 10 கிராம் சேர்த்து தாராளமாக நீர் விட்டு காய்ச்சி பாதியாக வற்றியதும் காலை, மாலையில் அருந்தி வந்தால் காய்ச்சல் சரியாகும். கண்வலி, கண் சிவத்தல் உள்ளிட்ட கண் நோய்கள் இருந்தால், வில்வ இலைத்தளிரை வதக்கி இளஞ்சூட்டில் ஒத்தடம் கொடுத்து வந்தால் உடனடியாக குணம் கிடைக்கும். மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அவதிப்படுபவர்கள் வில்வ இலையை விழுதாக அரைத்து கொட்டைப்பாக்கு அளவுக்கு சாப்பிட்டுவிட்டு குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் பலன் கிடைக்கும். பெரும்பாடு என்னும் இந்த பிரச்னையால் பாதிக்கப்படுபவர்களுக்கு இது ஒரு எளிய வைத்தியமாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்