கொஞ்சம் கரும்பு... நிறைய காதல்...

குமார்களின் காவலில் குமுதாக்கள்
கோலமிட
`கேட்சி’களை டெலிட் செய்து
வாழ்க்கையை அப்டேட்டிடும்
போகிதான் பொங்கலின் தொடக்கம்

விண்ணைத் தாண்டிய ஜெஸ்ஸிக்கள்
எல்லாம்
மண்ணை வேண்டி பொங்கலிடும்
அழகியல் அது

நாணத்தோடு வெண்பொங்கல் வைக்கும்
காதம்பரிகளின்
கண்கள் என்றுமே wஎங்களுக்கு
சர்க்கரைப் பொங்கல்தான்

காதல் கண்மணிகளின் கரும்புச் சிரிப்பில்
மாடு குளிப்பாட்டும் துல்கர் சல்மான்கள்
எல்லோரும்
பாட்டுக்கார ராமராஜன்தான்
கிராமத்து மைனாக்களின் பார்வையில்
பரட்டைத் தலை ஹீரோக்கள்
காளையடக்கும் ஜல்லிக்கட்டும்
ஒரு ஜாலிக்கட்டுதான்

மலர் டீச்சரிடம் மையல் கொண்டு
மஞ்சள் நீர் தெளித்திடும்
தமிழ் ஜார்ஜ்களின்
கன்னிப் பொங்கல் இது

ரோமியோ ஜுலியட்கள் கொண்டாடும்
எல்லா பொங்கலும்
ஒருவகையில் காதலர் தினம்தான்
நாலு நாள் விடுமுறைக்குப் பின்
கொஞ்சம் கரும்பு  இனிப்போடும்,
நிறைய காதல் இனிப்போடும்
திரும்பிச் செல்லும் பொங்கலை
ஒரு வார்த்தையில்
`காதல்’ என்றும் சொல்லலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்