வைரமே... வைரமே!

மின்னும் வைர ஆபரணங்கள் மீது ஒவ்வொரு பெண்ணுக்குமே ஆசைதான். வைர நகைகள் வாங்க, அணிய, பாதுகாக்க டிப்ஸ் தருகிறார், சென்னையைச் சேர்ந்த ஸ்டைலிஸ்ட் அல்மாஸ் மாலிக்.

வைர நகைகள் வாங்கும்போது, அதுபற்றி அறிந்த, அனுபவமுள்ள ஒருவருடன் செல்லவும்.

டிஸ்பிளேயில் பார்க்கும்போது மிக கவர்ச்சிகரமாகத் தெரியும் வைர நெக்லஸ், அணியும்போது கழுத்தில் கிரவுடடாக, அதாவது பொருத்தத்தை மீறிப் பெரிதாகத் தெரியும். உயரம், முக வடிவத்துக்கு ஏற்றாற்போல வைர நகைகளைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.

வைரங்களுக்கு பிரசன்ஸ் ஜாஸ்தி என்பதால், ஒரு குட்டி நெக்லஸ் அணிந்தாலே நிறைய நகைகள் அணிந்த லுக் கிடைத்துவிடும்.

கம்மல், மூக்குத்தி, மோதிரம் என வைரத்தை தாராளமாக தினசரிப் பயன்பாட்டுக்கு அணியலாம். கீறல், சேதம் பற்றிய கவலையெல்லாம் தேவையில்லை.

தினசரி பயன்பாட்டுக்கு எடை குறைந்த லைட் வெயிட் வைர நகைகள் நல்ல சாய்ஸ்.

ஹெவி வைர நகை களைத் திருமணங்கள் போன்ற சுபகாரியங்களுக்கு அணிந்து கொள்ளலாம்.

வைரம் எல்லா வண்ணங் களோடும் ஒத்துப்போகும் என்ப தால் எந்த நிற ஆடையுடனும் அணியலாம்.

வைர நகைகள் அதிக கவனம் ஈர்க்கும் என்பதால், அதற்குத் தகுந்த இடங்களுக்கு மட்டும் அணிந்து செல்லவும்.

வைரக் கம்மல் விஷயத்தில், முக அமைப்புக்கு ஏற்ற டிசைனில் கம்மலைத் தேர்ந்தெடுக்கவும். வட்ட முகத்துக்கு எடுப்பாக இருக்கும் தொங்கும் தோடுகள், நீள முகத்துக்குப் பொருந்தாது. எனவே, அவ்வளவு விலை கொடுத்து வாங்கும் வைரக் கம்மல்களை, முகத்துக்குப் பொருந்தும் டிசைனில் வாங்குவது முக்கியம்.

பிரேஸ்லெட், மோதிரம் போன்ற வைர நகைகள் மாடர்ன் அவுட்ஃபிட்களுக்கும் பொருந்தும்; புடவை, சுடிதாருக்கும் பொருந் தும். குறிப்பாக, லைட் வெயிட் வளையல்கள் இப்போது ட்ரெண்டி கலெக்‌ஷன்கள்  கிடைக்கின்றன. சுடிதார், புடவை என ஜமாய்க் கலாம்.

எப்போதும் மேக்கப்பை முடித்த பின்னரே வைர நகைகளை

அணியவும். வைர நகை அணிந்த பின் அலங்காரம் செய்வது, தலைவாருவதைத் தவிர்க்கவும்.

பொதுவாக, பகல் நேரங்களுக்கு பளிச் `ஹியூ’ தவிர்க்கலாம். இரவு நேரங்களில் பளிச் `ஹியூ’, ஹெவி வைர நகைகள் என்று கலக்கலாம்.’’

கோ.இராகவிஜயா 

நகைகள் மற்றும் மாடல் உதவி: கீர்த்திலால் ஜுவல்லரி, சென்னை

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick