வழிகாட்டும் ஒலி

"படிக்காதவங்களும் ஜெயிக்கலாம்!"

டிச்சவங்கதான் சம்பாதிக்க முடியுமா? குறைவா படிச்ச, படிக்காத பெண்களும் தலை நிமிர்ந்து நிற்கும்விதமான வருமானத்தைக் கொடுக்கக்கூடிய தொழில்... கிராஃப்ட்! பத்தாவது படிச்ச நான் மாசம் 20,000 ரூபாய்க்கும் மேல சம்பாதிக்கிறேன்னா, அதுக்கு கிராஃப்ட்தான் காரணம். கிராமம், நகரம் என எந்த வேறுபாடும் இல்லாம, நீங்க எங்க இருந்தாலும் கைநிறைய லாபத்தை அள்ளிக்கொடுக்கும் பிசினஸ் இது!’’

- சிரித்த முகத்தோடு பேச ஆரம்பித்தார், ஸ்ரீவில்லிபுத் தூரைச் சேர்ந்த உமா மாரியப்பன்.

‘‘கிராஃப்ட்டில் நிறையப் பிரிவுகள் இருக்கு. நிறைய இடங்களில் அந்தந்த கிராஃப்ட்டுக்கு பிரத்யேக வகுப்புகள் எடுக்கறாங்க. ஆர்வம் இருக்கும் கைவேலைப்பாட்டில் ஒரு வாரம் பயிற்சி வகுப்புகள் சென்றாலே அடிப்படை விஷயங்களையும் நுணுக்கங்களையும் கத்துக்கலாம். அப்புறம் வீட்டில் கற்பனைத்திறனுக்கு ஏற்ப டிசைன்களை உருவாக்கி, நண்பர்களுக்குக் கொடுத்து நிறை, குறைகளை கேட்டறிஞ்சு மெருகேத்திக்கலாம். அடுத்த கட்டமா, அப்டேட்டட் மாடல்களை ஆன்லைனிலோ, கூடுதல் பயிற்சி வகுப்புகளிலோ கத்துக்கலாம். தெளிவும் திருத்தமும் கைவந்ததும், தொழிலை ஆரம்பிச்சுடலாம்.

வித்தியாசமான கலர் காம்பினேஷன், புதுப்புது டிசைன்ஸ், குறித்த நேரத்தில் டெலிவரி இதெல்லாம் பிசினஸை அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டுப் போகும். இன்னொரு பக்கம், பயிற்சி வகுப்புகளும் எடுக்க ஆரம்பிக்கலாம். கிராஃப்ட்டைப் பொறுத்தவரை புதுப்புது மெட்டீரியல்கள் அறிமுகமாகிட்டே இருக்கும். அதில் பின்தங்கிடாம இருக்கணும். அப்போதான் வெற்றிபெற முடியும். பிசினஸை மேலும் வளர்க்க, ஆன்லைனில் அப்லோடு செய்யக் கத்துக்கணும். ஆர்டர்கள் குவியும். அப்புறம் என்ன... நீங்களும் பிஸிதான்!’’ என்ற உமா,

கிராஃப்ட்டில் வெற்றிபெற கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

எந்த மாதிரியான கிராஃப்ட் பொருட்களுக்கு அதிக வரவேற்பு இருக்கு?

என்னென்ன பயிற்சி வகுப்புகள் எடுக்கலாம்?

ஆர்டர்களைப் பெருக்கும் வழிமுறைகள் என்ன?

செலவைக் குறைத்து, அதில் லாபம் எடுப்பது எப்படி?

புதுப்புது வெரைட்டிகளை, டிசைன்களை அறிமுகப்படுத்த வழி என்ன?

தயார் செய்த பொருட்களை எப்படி மார்க்கெட்டிங் செய்வது?

- கிராஃப்ட் தொழிலில் ஜெயிப்பதற்கான இந்த ஆலோசனைகளை எல்லாம் ‘வழிகாட்டும் ஒலி’யில், ஜனவரி 12 முதல் 18 வரை பகிர்கிறார். 044 - 66802912* என்ற எண்ணில் அழையுங்கள்!

 

சு.சூர்யா கோமதி படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick