வேலைவாய்ப்பை பிரகாசமாக்கும் டிப்ளோமா கோர்ஸ்கள்..!

“இளநிலை படிப்போடு சேர்த்து அது சம்பந்தப்பட்ட ஒரு டிப்ளோமா கோர்ஸையும் படித்தால்... வேலைவாய்ப்பு என்று வரும்போது, ‘இந்தத் துறையில் எல்லா பாடங்களும் எனக்குத் தெரியும் என்றாலும், குறிப்பிட்ட இந்தப் பாடத்தில் நான் சிறப்புப் பயிற்சியும் பெற்றிருக்கிறேன்’ என்று சொல்லும்போது, நீங்கள் தனித்துத் தெரிவீர்கள்தானே?! அது பணி வாய்ப்பில் உங்களுக்கு முன்னுரிமையும் பெற்றுத் தரும்’’ என்கிறார், சென்னையில் உள்ள ‘கேலக்ஸி’ கல்வி ஆலோசனை மையத்தின் ஆலோசகர் நிவாஸ் சம்பந்தம்.

சரி... இது எப்படி சாத்தியம்? தொடர்ந்து பேசுகிறார் ஸ்ரீநிவாஸ்...

“இளநிலை படிப்போடு கூடுதலாகப் படிக்கக்கூடிய, ஓர் ஆண்டுக்குள் முடியக்கூடிய டிப்ளோமா படிப்புகளை தமிழ்நாட்டில் பல பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன. இதன் மூலமாக படிப்பை முடிக்கும்போது உங்கள் கையில் இரண்டு சான்றிதழ்கள் இருக்கும். 

எந்த மாதிரியான படிப்புகளுக்கு எல்லாம் டிப்ளோமா கோர்ஸ்கள் வழங்கப்படுகின்றன என்றால், அனைத்து இளநிலை கலை மற்றும் அறிவியல், மேலாண்மை படிப்புகளுக்கும் உள்ளன. பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் மூலமாக தொலைதூர கல்வியாக இதைப் படிக்கலாம். நீங்கள் படிக்கும் கோர்ஸ் சம்பந்தப்பட்ட வேலையில் முன்னுரிமை பெற, இந்த சான்றிதழ் படிப்பு பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதில் சில படிப்புகள் சுயமாக தொழில் தொடங்குவதற்கான பயிற்சி அடங்கிய ‘செல்ஃப் சப்போர்டிவ்’ கோர்ஸாகவும் வழங்கப்படுகின்றன.

என்னென்ன படிப்புக்கு என்னென்ன துணைப் படிப்புகள் உள்ளதென பார்க்கலாம். 

பி.ஏ., தமிழ் படிப்பவர்கள் டிப்ளோமா கோர்ஸாக நாட்டுப்புறக் கலைகள், ஆராய்ச்சி மற்றும் இலக்கியம் அடங்கிய நாட்டுப்புறவியல் படிக்கலாம். இது அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படுகிறது. ஒரு வருடப் படிப்பு. நாட்டுப்புற கலை ஆராய்ச்சி, மானிடவியல் துறைகளில் இது வேலைவாய்ப்பை பிரகாசமாக்கும்.

பி.பி.ஏ படிப்பவர்கள், அடிப்படை வணிகவியல், ஆங்கில மொழித்திறன் பாடங்கள் அடங்கிய அலுவலக மேலாண்மை டிப்ளோமா படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் இந்த கோர்ஸ், அனைத்து மேலாண்மை அலுவலகங்களிலும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை ஏற்படுத்தித் தரும்.

பி.இ பொறியியல் படிப்புகளுக்கு துறைவாரியான டிப்ளோமா படிப்புகளை தமிழகம் முழுவதும் பல தனியார் நிறுவனங்கள் வழங்குகின்றன.

உதாரணமாக டிரிபிள் இ, இ.சி.இ படிப்பவர்கள் VLSI (6 மாதங்கள்), அட்வான்ஸ்டு டிஜிட்டல் சிஸ்டம் டிசைன் (ஒரு வருடம்) போன்ற டிப்ளோமா படிப்புகள் மூலம் முதுநிலை பாடங்களை இளநிலை படிக்கும்போதே முடித்துவிட முடியும். எலெக்ட்ரானிக் சாதனங்களின் தன்மையை மாற்றாமல் உருவத்தை சிறியதாக்குதல் பற்றிய டெலிகம்யூனிகேஷன், டிஜிட்டல் அண்ட் புராசஸர் டிசைன் கோர்ஸ்களையும் படிக்கலாம். எலெக்ட்ரானிக் கம்பெனிகளின் வேலைவாய்ப்பை பெற அது பலமாக அமையும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்