மடையாம்பட்டு கிராமம் to துருக்கி..!

‘‘சாதனைங்கிறது பெரிய விஷயம். ஆனா, முயற்சி செஞ்சா முடியாதது எதுவும் இல்ல’’ என்று ஹேமமாலினி சொல்லும்போது, நமக்கும் சில துளிகள் நம்பிக்கை தருகிறார். வேலூர் மாவட்டம், மடையாம்பட்டு கிராமத்தில், ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவரான ஹேமமாலினி. ஒடுக்கத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி. மாநில, தேசிய அளவிலான ஈட்டி எறிதல் சாம்பியன் என்ற அடையாளத்தை தனதாக்கிக்கொள்ள, இந்தக் கிராமத்துச் சிறுமிக்குத் துணையாக, அவர் திறமையைத் தவிர வேறெதுவும் இல்லை. 

‘‘சின்ன வயசுல இருந்தே விளையாட்டுனா எனக்கு ரொம்பப் பிடிக்கும். எட்டாவது படிச்சப்போ நான் த்ரோ பால் விளையாடினதைப் பார்த்த எங்க உடற்பயிற்சி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, ‘நல்லா பவரா த்ரோ பண்ணுற’னு சொல்லி, ஈட்டி எறிதல் பயிற்சி கொடுக்க ஆரம்பிச்சார். ஒன்பதாவதுல இருந்து என்னை மாவட்டப் போட்டிகளுக்கு கூட்டிட்டுப் போனார். போட்டிகளில் விளையாடினப்பதான் பொறுப்பு புரிஞ்சது. கடுமையா பிராக்டீஸ் பண்ண ஆரம்பிச்சேன்.

எங்க பள்ளியில நவீன பயிற்சிக் கூடங்கள் எல்லாம் இல்ல. இருந்தாலும், அப்படி உயர்தரப் பயிற்சி பெற்று வர்றவங்களையும் வெல்லும் திறன் நமக்கு வேணும்னு எனக்கே நானே சொல்லிக்கு வேன். இந்த மூணே வருஷத்துல மாநில அளவு, தேசிய அளவுப் போட்டிகளில் தங்கம் வரை ஜெயிச்சது மட்டுமில்லாம, பல சாதனைககளையும் நிகழ்த்தினேன்’’ என்று சொல்லும் ஹேமமாலினியின் வெற்றி புரொஃபைல், பிரமாதம்.

2014-ல் ஹைதராபாத்தில் நடந்த ஐந்து மாநிலங்கள் கலந்துகொண்ட தென்னிந்திய அளவிலான போட்டியில் தங்கப் பதக்கம் மற்றும் 38.05 மீட்டர் சாதனை.

2015-ல் ஜார்கண்டில் நடந்த 16 வயதுக்கான ஸ்டூடன்ட் ஜூனியர் நேஷனல் அத்லெட்ஸ் பிரிவில் தங்கப் பதக்கம் மற்றும் 39.69 மீட்டர் சாதனை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்