நோய் நாடி..! - வாட்டியெடுக்கும் தலைவலி... வராமல் தடுப்பது எப்படி?

கம்ப்ளீட் மெடிக்கல் கைடு

லைவலி...  இன்று பள்ளிக் குழந்தைகளையேகூட படுத்தும் பிரச்னை இது. ஒருவருக்கு வயதும் வேலையும் அதிகமாக ஆக, அவ்வப்போது வரும் தலைவலியில் இருந்து நிரந்தரப் பிரச்னையாகவே தங்கிவிட்ட தலைவலி வரை அவரது வாழ்க்கை முறையில் அது ஓர் அங்கமாக இணைந்துவிடுகிறது. நோய்களைப் பற்றிய வெளிச்சம் தந்துவரும் ‘நோய் நாடி’ தொடரில், வயது வித்தியாசமின்றி அனை வரையும் வாட்டக் கூடிய தலைவலி பற்றிய மருத்துவத் தகவல்களைத் தருகிறார், இந்தியத் தொழில்நுட்பக் கழகம், சென்னை (IIT Madras) வளாக மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை சிறப்பு நிபுணர் டாக்டர் தமிழ்மணி.

தலைவலி... காரணங்கள்!

தலைவலியானது தன் இயல்பில் ஒருவருக்கு ஒருவர் வேறுபடக்கூடும். சிலருக்கு அவர்களின் அப்போதைய செயல்பாடுகள் மூலமாக வந்த தற்காலிக, சாதாரண தலைவலியாக இருக்கலாம். சிலருக்கு தலையின் ஒரு பக்கமாக வலிக்கும். சிலருக்கு தலை பாரமாக இருக்கும். சிலருக்கு சுத்தியல்கொண்டு அடிப்பதுபோல இருக்கும். சிலருக்கு தலையைப் பிய்த்து எறிந்துவிடலாம்போல கொடுமையான வலியாக இருக்கும். சிலருக்கு அன்றாட வேலைகளைச் செய்யமுடியாத அளவுக்கு உடல் இயக்கத்தையே பாதிப்பதாக இருக்கும். பசியின்மை, சுவாசப் பிரச்னை, மூக்கில் நீர் கோப்பது என சிலரைப் படுத்தும். இப்படி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை, ஏதேனும் ஒரு வகை தலைவலியால் பாதிக்கப் படுகிறார்கள். ஒவ்வொரு வருக்கும் அது ஏற்படுவதற்கான காரணம் வேறுபடுகிறது.

குழந்தைகளைப் பொறுத்த வரை, கண்பார்வைக் குறைபாடு, துரித உணவு உள்ளிட்ட உடலுக்குக் கெடுதல் விளைவிக்கும் அல்லது செரிமானப் பிரச்னைகளை உண்டாக்கும் உணவுகளைச் சாப்பிடுவது போன்றவற்றால் தலைவலி ஏற்படலாம். பள்ளியில் இருந்து வீட்டுக்குத் திரும்பும் குழந்தைகள், தங்களின் சோர்வு, கோபம், வெறுப்பு, களைப்பு, ஓய்வின்மை போன்றவற்றாலும் தலைவலிக்கு உள்ளாகலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்