பெரும்பாடு - வெள்ளைப்படுதல்...குணமாக்கும் அத்திப்பால்!

வைத்தியம்

த்தி மரத்தின் இலை, பால், பிஞ்சு, பழம் என அனைத்தும் மருத்துவக்குணம் மிக்கவை. உலரவைத்துப் பொடியாக்கிய இலைகள் பித்தம், பித்தத்தால் வரும் நோய்களைக் குணமாக்கக்கூடியவை. அத்தி மரத்தின் பாலை வெண்ணெய் அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால்... ரத்த பேதி, பெரும்பாடு (மாதவிடாயின் போது அதிக ரத்தப்போக்கு), வெள்ளைப்படுதல், நீரிழிவு போன்றவை குணமாகும். அத்தி மரத்தின் பட்டையை பொடியாக்கி பசுமோர் விட்டு கலந்து சாப்பிட்டு வந்தாலும் பெரும்பாடு சரியாகும். அத்தி மரப்பட்டையை இரவில் நீரில் ஊறவைத்து, காலையில் பட்டையுடன் நீரைக் கொதிக்கவைத்து, ஆறியவுடன் அந்த நீரைப் பருகி வந்தால் வாத நோய், மூட்டு வலிகள் குணமாகும்.

அத்திப்பிஞ்சு மூலத்துக்கு முக்கிய மருந்தாகும். அத்திப்பிஞ்சு, கோவைப்பிஞ்சு, மாம்பட்டை, சிறுசெருப்படை ஆகியவற்றை சம அளவு எடுத்து வாழைப்பூ சாறு அல்லது வாழைப்பழம் சேர்த்து அரைத்து, ஒரு வேளைக்கு ஒரு நெல்லிக்காய் அளவு சாப்பிட்டுவந்தால்... சீதபேதி, ரத்தபேதி, வயிற்றுக்கடுப்பு போன்றவை குணமாகும். அத்திக்காயை பொரியல் அல்லது கூட்டாக செய்து சாப்பிட்டு வந்தால் வாத நோய், உடல் சூடு, புண் சரியாவதோடு மலச்சிக்கலும் தீரும். அத்திப்பழத்தை மணப்பாகு செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் விலகுவதோடு நாவறட்சி நீங்கும். மேலும் இது ரத்த சோகையை சரியாக்கும்.

நாட்டு மருந்துக்கடைகள் மற்றும் மளிகை கடைகளில் விற்கக்கூடிய காய்ந்த அத்திப்பழத்தையும் சாப்பிடலாம். பழக்கடைகளில் கிடைக்கும் பசுமையான அத்திப்பழங்களையும் சாப்பிடலாம். ஆனால், அத்தியில் ஆக்ஸலேட் உப்பு இருப்பதால் சிறுநீரகக்கல் உள்ளவர்கள் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்