படிப்பறிவு இல்லாமலே பல்லாயிரக்கணக்கில் வருமானம்!

தேனீ வளர்ப்பு தொழிலில் வெற்றிக்கொடி கட்டும் மஞ்சுளா...சுயதொழில்

டிகிரி முடித்தவர்கள், ‘ஆட்கள் தேவை’ பகுதியை நாளிதழ்களில் துழாவிக்கொண்டிருக்க... பள்ளிக்கூடம் செல்லாத ஒரு கிராமத்துப் பெண், மாதம் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்து அசத்திக்கொண்டிருக்கிறார்!

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையத்திலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கொளப்பளூர் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுளா, தன் கடுமையான உழைப்பாலும் விடாமுயற்சியாலும் தேன் பண்ணையில் லாபம் ஈட்டிவரும் சுயதொழில் முனைவோர்.

‘‘நான் படிப்பு வாசனையே இல்லாதவங்க...’’ என்றுதான் பேச்சை ஆரம்பிக்கிறார் மஞ்சுளா. ‘‘எங்க தாத்தா தேன் பண்ணை வெச்சு சம்பாதிச்சுக்கிட்டு இருந்தாரு. அதனால அதைப் பத்தி கொஞ்சம் தெரியும். 18 வருஷத்துக்கு முன்னாடி எனக்குக் கல்யாணம் ஆனப்போ, வீட்டு வேலையைத் தவிர வேறெதையும் பத்தி யோசிக்காம இருந்தேன். என் வீட்டுக்காரர் பார்த்திபன்தான், ஒன்பது வருஷத்துக்கு முன்னாடி, ‘நீ தேனீ வளர்க்குறியா?’னு கேட்டாரு. பயமா இருந்தாலும், வருமானத்துக்கு ஒரு வழி கிடைக்குமேனு `சரி'னு சொன்னேன்.

இங்க பக்கத்துல தேனீ வெச்சிருந்தவங்க கிட்ட கொஞ்சம் தேனீக்களை வாங்கி, கன்னியாகுமரியில இருந்து பெட்டி வரவழைச்சு அதுல வளர்க்க ஆரம்பிச்சேன். வேலை கொஞ்சம் பிடிபடவும், இன்னும் கூடுதலா தேனீ வளர்க்கலாம்னு நம்பிக்கை வந்துச்சு. உடனே மார்த்தாண்டம்ல இருக்குற ஒரு தேனீ பண்ணையில ஒரு வார பயிற்சி எடுத்துக்கிட்டு, தேனீயும் வாங்கிட்டு வந்தேன். முழுநேரமா தேனீ வளர்ப்புல இறங்கினேன். ஆரம்பத்துல தேனீக்களிடம் கொட்டு நிறைய வாங்கியிருக்கேன். உடனே எங்க வீட்டுல இருந்தவங்க, ‘எதுக்கு இந்த தேவையில்லாத வேலை?’னு சத்தம் போட்டாங்க. ‘ஆரம்பிச்சாச்சு... இதை எப்படியும் நல்லபடியா நடத்திக் காட்டிடணும்’னு வைராக்கியத்தோட இருந்தேன்’’ என்று சொல்லும் மஞ்சுளா, ஒவ்வொரு அடியாக முன்னேறியிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்