`அனிமல் அம்மா’க்களின் அன்பு சாம்ராஜ்யம்!

தாய்ப்பாசம்

றறிவு உள்ள மனித இனத்தின் தாய்ப்பாசம் பற்றி நாம் அறிவோம். ஐந்தறிவு உள்ள விலங்குகளின் தாய்ப்பாசம், அதைப்போலவே சிறப்பானது; சிலிர்ப்பானது! அந்தப் பாசக்கார அம்மாக்களின் உலகில் ஒரு சின்ன ரவுண்ட்-அப்...

சிங்கம்

பெண் சிங்கம் 4 மாதங்கள் கர்ப்பம் சுமந்து, ஒரு பிரசவத்தில் 4 குட்டிகளைப் பெற்றெடுக்கும். குட்டிகள் பிறந்து கண் திறக்காத நாட்களில், தனது துணையான ஆண் சிங்கம் உட்பட எந்த விலங்குகளின் கண்களிலும்படாமல் தன் குட்டிகளைப் பக்கத்தில் இருந்து பாதுகாக்கும். 8 வாரங்கள் கழித்துதான் தன் குட்டிகளைப் பிற சிங்கங்களிடம் அறிமுகப்படுத்தும். ஒரு தாய்க்குப் பிறந்த குட்டிகளை இதர பெண் சிங்கங்களும் அருகில் இருந்து கவனித்துக்கொள்ளும். 6 வாரங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் குட்டிகள், பின்னர் இறைச்சி உண்ண ஆரம்பிக்கும்.

பிறந்த 4 சிங்கக் குட்டிகளில் சில, இரை கிடைக்காமலும், ஆண் சிங்கங்கள், பிற விலங்குகளால் வேட்டையாடப்பட்டும்  இறந்துவிட நேரும். முடிந்தவரை அந்த வேட்டையில் இருந்து பாதுகாக்க தாய் சிங்கமும், அதற்குத் துணையாக மற்ற பெண் சிங்கங்களும் வரும். பெண் சிங்கங்களின் படையைப் பார்த்து வேட்டையாட வந்த மிருகங்கள் தலைதெறிக்க ஓடிவிடும். 2 அல்லது 3 வயது வரை குட்டிகளை, தாய் சிங்கம் கண்கொத்தி யாகப் பாதுகாக்கும்.

சிறுத்தை

பெண் சிறுத்தை ஒரு பிரசவத்தில் 2 முதல் 5 குட்டிகளைப் பெற்றெடுக்கும். குட்டியின் வாசனைகூட வெளியில் தெரியாத அளவுக்கு தடுப்பு வேலிகளை தாய் அமைக்கும். 3 மாதம் வரை குட்டிக்கு தாய்ப் பால்தான். பின்னர் இறைச்சி உண்ணப் பழக்கும். தாய்ப்பூனை தன் குட்டிகளுடன் மெல்லிய உறுமலுடன் பேசுவதுபோலவேதான், சில ஒலிகளை எழுப்பி தாய் சிறுத்தையும் பேசும். 6 மாதத்தில் தன் குட்டிக்கு வேட்டையாடவும், பிற மிருகங்களிடம் இருந்து தப்பிக்கவும் பயிற்சி கொடுக்கும். 18 மாதங்கள் முதல் இரண்டு வருடங்களுக்குப் பிறகு தாயிடம் இருந்து தனியாகச் செல்லப் பழகும்... குட்டி சிறுத்தை. தான் வேட்டைக்குச் செல்லும்போது, குகைகளில் தனது குட்டிகளை மறைத்துவைத்துவிட்டுச் செல்லும் தாய்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்