‘செல்’லிலே விழித்து... ‘செல்’லிலே தூங்கி!

தொழில்நுட்ப பூதம்

‘‘சார், உங்களை நான் எங்கயோ பார்த்த மாதிரியே இருக்கே... நீங்க என் ஃபேஸ்புக் ஃப்ரெண்டா?’’

‘‘இல்ல சார்... நான் ரொம்ப நாளா உங்க பக்கத்து வீட்லதான் இருக்கேன்!’’

- இதற்கு முன்பாக இந்த நகைச்சுவையை நாம் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பிருக்கலாம். அது சிரிக்க அல்ல, சிந்திக்கவே என்பதை உணர்த்தும் வகையில் நம் அருகில் உள்ளவர்களைக்கூட அந்நியப்படுத்திக்கொண்டிருக்கிறது இந்த டெக்னாலஜி யுகம்.

அடிக்கடி செல்போன் மணி காதுக்குள் ஒலிக்கிறதா? வாட்ஸ்அப் நோட்டிஃபி கேஷன் வருவதைப்போல உணர்ந்து உங்கள் செல் போனை அடிக்கடி சோதித்துப்பார்க்கிறீர்களா? காலையில் செல்போனைப் பார்த்துக்கொண்டே எழுந்து, இரவு செல்போனைப் பார்த்துக் கொண்டே தூங்குகிறீர்களா? அப்படி என்றால் இந்தக் கட்டுரை உங்களுக்கானது.

பேசவும், குறுஞ்செய்தி அனுப்பவும் பயன்பட்டு வந்த செல்போன்கள், தற்போது இணையத்தில் இணைந்து காதல் முதல் மார்க்கெட்டில் கத்திரிக்காய் வாங்குவது வரை பல வேலைகளை செய்துகொண்டிருக்கின்றன. தகவல் அனுப்ப எஸ்.எம்.எஸ், தகவலுடன் படங்கள், ஆடியோ, வீடியோ அனுப்ப வாட்ஸ்அப், சொந்த அனுபவங்கள் மற்றும் சமூகப்பார்வையை பதிவுசெய்ய ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் என கையடக்க செல்போனில் அடங்கியும் விரிந்தும் கிடக்கிறது இவ்வுலகம்.

காதலிக்காக கால்கடுக்கக் காத்திருந்து, அவள் பின்னால் தொடர்ந்து சென்று கடிதம் கொடுக்கும் காலம் இப்போது காணாமலே போனது. ஃபேஸ்புக்கில் ஃபாலோ செய்கிறார்கள். `வாட்ஸ்அப்'பில் காதல் செய்கிறார்கள். இதயங்களைத் தொடாமல் வெறும் விழிகளையும் காதுகளையும் மட்டுமே தொட்டுவிட்டு உடைந்துபோகின்றன பல காதல்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்