சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
பித்ரு தோஷம் நீங்க வைக்கும் நென்மேலி பெருமாள்!

`முன்னோர்களுக்கு இதுவரை திதி கொடுக்க முடியவில்லையே' என்ற சங்கடத்தில் இருப்பவர்களின் மனக்குறையைத் தீர்த்து வைக்கிறார், லக்ஷ்மி நாராயணப் பெருமாள். காஞ்சிபுரம் மாவட்டம், நென்மேலியில் உள்ள அவரது ஆலயம் காசிக்கு ஈடாகக் கருதப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் சாலையில் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது நென்மேலி கிராமம். முன்பு ‘புண்டரீக நல்லூர்’ என்று அழைக்கப்பட்ட இந்தக் கிராமம், மிகவும் பழமை வாய்ந்தது. கோயிலின் அர்ச்சகர் சம்பத் பட்டாச்சாரியார் நமக்கு தலவரலாற்றை விவரித்தார்.

``ஆற்காடு நவாப் காலத்தில் நாராயண சர்மா - சரஸவாணி என்ற தம்பதி வாழ்ந்துவந்தனர். திவானாக இருந்த நாராயண சர்மா, விஷ்ணுவின்மீது தீவிர பக்தி கொண்டவர். நவாப்புக்கு கொடுக்க வேண்டிய வரிப் பணத்தைக்கொண்டு, லக்ஷ்மி நாராயணப் பெருமாளுக்குத் திருப்பணி செய்தார் நாராயண சர்மா. இதனால் கோபமடைந்த நவாப், அந்த தம்பதியின் தலையைக் கொய்ய உத்தரவிட்டார்.

தம்பதி அந்த தண்டனையை ஏற்றுக்கொள்ளாமல், 108 திவ்யதேசங்களில் ஒன்றாகக் கருதப்படும் திருவிடந்தை (மாமல்லபுரம் அருகே உள்ளது) நித்ய கல்யாணப் பெருமாள் கோயிலில் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர். இறக்கும் தறுவாயில், தங்களுக்கு ஈமச்சடங்கு செய்ய வாரிசு இல்லையே என்று மனம் வருந்தினர். ‘கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு நானே பிள்ளையாக இருந்து ஈமச்சடங்கினை செய்கிறேன்’ என்று பெருமாள் உறுதியளித்தார். சொன்னதுபோல அவரே ஈமச்சடங்கினையும் செய்துவைத்தார்.

நாராயண சர்மாவின் மனைவி சரஸவாணியின் பெற்றோர், செய்யாறு அருகில் உள்ள வாழைப்பந்தல் என்னும் கிராமத்தில் திவானாக இருந்தார்கள். நவாப்பின் உத்தரவைக் கேள்விப்பட்ட அவர்கள், ‘எங்கள் மருமகன் செலுத்தவேண்டிய வரிப்பணத்தை நாங்கள் செலுத்திவிடுகிறோம். இருவரையும் விடுவிக்க வேண்டும்’ என்று நவாப்பிடம் முறையிட்டனர். ‘நான் செய்யவேண்டிய திருப்பணிகளைத்தான் உங்கள் மருமகன் செய்தார். என்னுடைய வேலையைத்தான் அவர்கள் செய்திருக்கிறார்கள். அவரை மன்னித்துவிடுகிறேன்’ என்றார் நவாப்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்