கேபிள் கலாட்டா!

`ஜும்பா

சேனல் ஏரியாவின் பிரபல டான்ஸர், ஸ்வேதா.

‘‘ரெண்டரை வயசுல டான்ஸ் கத்துக்க ஆரம்பிச்சு, எட்டாவது படிக்கும்போது அரங்கேற்றம் செஞ்சேன். பத்தாவது வரை கோயம்புத்தூர்ல படிச்சுட்டு, சென்னைக்கு வந்து ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிக்கிற சமயத்தில்தான் விஜய் டி.வி ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ போட்டியில் கலந்துகிட்டேன். தொடர்ந்து கலைஞர் டி.வி ‘மானாட மயிலாட - 4’ நிகழ்ச்சியில் `செகண்ட் ரன்னர் அப்'பாகவும், `சீஸன் - 5'ல் டைட்டில் வின்னராகி பாண்டிச்சேரியில் ஒரு வீடும் பரிசா வாங்கினேன். பி.காம் படிச்சுட்டே, ‘சமர்’ படத்துல நடிகர் விஷாலுக்கு தங்கையாவும், விஜய் டி.வி ‘ஜோடி நம்பர் 1’ நிகழ்ச்சி, ‘கனா காணும் காலங்கள்’ சீரியல், சன் டிவி ‘கார்த்திகைப் பெண்கள்’ சீரியல்லயும் நடிச்சேன்.

தொடர்ந்து ஃபிரான்ஸ் நாட்டில் எம்.எஸ்ஸி படிச்சுட்டே அங்க டான்ஸ் கிளாஸும் எடுத்தேன். ஒவ்வொரு வருஷமும் அங்க நடக்கிற `பாரிஸ் ப்ளேஜ் (Paris Plage)' என்ற பெரிய டான்ஸ் ஷோவுக்கு கொரியோகிராஃப் பண்ற வாய்ப்பு, அப்போ எனக்குக் கிடைச்சது. படிப்பு முடிஞ்சதும் அங்கேயே ஒரு வருஷம் படிப்பு சார்ந்த வேலை செஞ்சுட்டு, சென்னைக்குத் திரும்பிட்டேன். பாண்டிச்சேரியில எனக்குப் பரிசா கிடைச்ச வீட்டுல இருந்துட்டே டான்ஸ் கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சேன். குழந்தைகள், பெரியவர்கள்னு இப்போ 50-க்கும் அதிகமானவங்களுக்கு ‘ஜும்பா (Zumba)' என்ற ஃபிட்னெஸ் டான்ஸ் சொல்லிக்கொடுத்துட்டு இருக்கேன். ‘சேம் (Same)’ ஆப் மூலமா ஆன்லைன்லயும் தினமும் மதியம் 1 - 2 மணிக்கு ஜும்பா டான்ஸ் சொல்லிக்கொடுக்கிறேன்!’’

கலக்குங்க மாஸ்டர்!

‘‘சுத்தமா தமிழ் தெரியாம நடிக்க வந்தேன்!’’

நடிப்பு, காஸ்ட்யூம் டிசைனிங் என சென்னைக்கும் பெங்களூருக்கும் மாறி மாறி பறந்துகொண்டிருக்கிறார், நேஹா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்