கதை கதையாம் காரணமாம்! - 8

கல்விப் பயணம்... கதைகள் இருந்தால் சுலபம்!

ள்ளியில் சுமார் எட்டு மணி நேரம், டியூஷனில் இரண்டு மணி நேரம். தவிரவும், காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை வீடுகளில் புத்தகமும் கையுமாகத்தான் பிள்ளைகள் இருக்க வேண்டிய சூழல். அப்படியிருந்தும் சில பாடங்களில் போதிய மதிப் பெண்கள் இல்லையென்று புகார்.

பள்ளிக்கே செல்லாமல் வீட்டில் இருந்தபடியே படிக்கும் ஹோம் ஸ்கூல் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். பள்ளி, டியூஷன் உள்ளிட்ட பயிற்சிகள் இருந்தும் பாடம் மனதில் தங்கவில்லை என்னும்போது, ஹோம் ஸ்கூலில் இந்தப் பிள்ளைகள் எப்படிப் படிப்பார்கள்?

முதலில் ஹோம் ஸ்கூல் பற்றி ஒற்றை வாக்கியத்தில் அறிமுகம் செய்துகொள்வோம். விடியற் காலையில் தூக்கத்திலிருந்து அவசரம் அவசர மாக எழுந்திருத்தல், மனப்பாடம் மற்றும் வீட்டுப்பாடம், தவற்றுக்கான தண்டனை உள்ளிட்ட, குழந்தைகள் மீது செலுத்தப்படும் பல்வேறு சுமை களிலிருந்து தங் கள் பிள்ளைகளை விலக்கி, வீட்டில் இருந்தே கல்வி கற்கச்செய்வதே ஹோம் ஸ்கூல். இந்த முறையில் சாதக, பாத கங்கள் உண்டு. அவற்றை நாம் இப்போது அலசப் போவதில்லை. ஹோம் ஸ்கூல் வழியே கல்வி கற்கும் குழந்தைகளுக்குக் கதை எவ்விதம் உதவுகிறது என்பதையே பார்க்கப்போகிறோம்.

ஹோம் ஸ்கூல் வழியே தன் பிள்ளைகளுக்குக் கல்வி கற்பிப்பது என்பது பெற்றோர்கள் எடுக்கும் மிகவும் துணிச்சலான முடிவு. பிள்ளைகளுக்குக் கல்வி தவிர பள்ளியில் கிடைக்கும் நட்பு, ஒழுக்கம் உள்ளிட்டவற்றையும் சேர்த்துத் தர வேண்டிய பொறுப்பு அந்தப் பெற்றோர்களுக்கு இருக்கிறது. இவை அனைத்தையும் பல்வேறு வழிகளில் பிள்ளைகளுக்கு அவர்கள் கற்றுத்தருகிறார்கள் அல்லது பிள்ளைகளாகவே கற்றுக் கொள்ள வகை செய்கிறார்கள். இவை அனைத்தையும் பிள்ளைகள் சுமையில்லாமல் கற்றுக்கொள்ள முதன்மையான வழியாக, கதைகளே இருக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்