சுவாதி, வினுப்ரியா, பிரியதர்ஷினி...

கண்ணீர் துடைப்போம்... கவனம் பதிப்போம்!சமூக அவலம்

ருதலைக் காதல் விவகாரத்தில் கொல்லப்பட்ட சுவாதி; சமூக வலைதளத்தில் தன்னுடைய படம் ஆபாசமாக சித்திரிக்கப்பட்டதால் மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்ட வினுப்பிரியா; காதல் கைகூடாததால் ஓடும் பஸ்ஸில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சேலத்தை சேர்ந்த பிரியதர்ஷினி என கடந்த வாரங்களில் மட்டும் இளம்தலைமுறைக்கு நேர்ந்திருக்கும் இந்த விபரீத முடிவுகள், பலரையும் உலுக்கியிருக்கிறது... குறிப்பாக பெண்களை!

இதையடுத்து, பெண்களுக்கு தற்காப்புப் பயிற்சி அளிக்க வேண்டும்; காவல்துறையைப் பலப்படுத்த வேண்டும்; சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கருத்துகளும், ஆலோசனைகளும் வந்துவிழுந்தவண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில், கிட்டத்தட்ட சுவாதிபோலவே பிரச்னையில் சிக்கி, சாதுர்யமாக மீண்ட சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரிடம் பேசியபோது, ‘‘என்னோட நிஜவாழ்க்கையில நடந்த சம்பவத்தை சொல்றேன். கல்லூரி காலத்துல எல்லாரை மாதிரியும் ஒரு நண்பனா அறிமுகம் ஆனான் ஒருத்தன். அவன்கிட்ட சந்தோஷம், துக்கம்னு பெர்சனல் விஷயங்களைப் பகிர்ந்துகிட்டேன். திடீர்னு ஒருநாள், என்னைக் காதலிக்கிறதா சொன்னான். எனக்கு, என் வாழ்க்கை பத்தின ஐடியா வேற மாதிரி இருந்தது. அதனால, ‘உன் மேல எனக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லை'னு சொன்னதும், ‘சரி, நண்பர்களாவே இருக்கலாம்’னு சொன்னான். தொடர்ந்து அவன்கூட பழகினேன். ஆனா, ஒருதலையா என்னைத் தொடர்ந்து அவன் காதலிச்சிருக்கான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்