நாமே தயாரிக்கலாம்... நல்ல உரம்!

இயற்கை உரம்

‘‘ ‘வீட்டுத்தோட்டம் போட்டாச்சு... செடியையும் வெச்சாச்சு. மூணு வேளை தண்ணி ஊத்துறேன்... ஆனா, செடியில வளர்ச்சியே இல்லையே’ என்ற வருத்தம், நாளடைவில் மாடித்தோட்ட ஆர்வத்தையே காணாமல் செய்துவிடும். இதில் தவறு செடிகளின் மீது இல்லை... நமது கவனிப்பில்தான் இருக்கிறது. குறிப்பாக, உரங்கள்’’ என்று சொல்லும் சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தின் தலைவரும், பேராசிரியருமான முனைவர் செந்தூர்குமரன், நம் வீடுகளில் கிடைக்கும் பொருட்களை வைத்தே உரங்களைத் தயாரித்து பயன்படுத்தும் வழிமுறைகளைக் கற்றுத்தருகிறார்...

மண்புழு உரம்

‘‘வீட்டுத் தோட்டங்களுக்கு மிகச்சிறந்தது, மண்புழு உரம். இதை சிறிய தொட்டிகளில் நாமே வீடுகளில் தயார் செய்துகொள்ளலாம். மட்கிய மாட்டுச்சாணம், இலைதழைக் கழிவுகள், காய்கறிக் கழிவுகள் என அனைத்தையும் ஒன்றாகப்போட்டு அதில் மண்புழுக்களை விட்டால், அவை கழிவுகளைத் தின்று உரமாக வெளியேற்றும். இதற்கு வாய்ப்பு இல்லாதவர்கள் கடைகளில் கிடைக்கும் மண்புழு உரங்களை வாங்கிப் பயன்படுத்தலாம். பெருநகரங்களில் உள்ள டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில்கூட தற்போது மண்புழு உரம் கிடைக்கிறது.

காய்கறிக் கழிவுகள்

காய்கறிகளை சமையலுக்கு நறுக்கும்போது கிடைக்கும் கழிவுகள், அழுகிய காய்கறிகள், பழங்கள், வெங்காயத்தாள் உள்ளிட்ட அனைத்து காய்கறிக் கழிவுகளையும் உரமாக்கலாம். அவற்றை அப்படியே செடிகளுக்குப் போடுவதற்குப் பதிலாக, மட்கவைத்து செடிகளுக்குப் பயன்படும்போதுதான் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும். சிலர் காய்கறிக் கழிவுகளில் மண்புழுக்களை விட்டு மட்கவைப்பார்கள். அது சரியான முறைஅல்ல. அப்படியே கழிவுகளைக் கொட்டினால் மண்புழு சாப்பிடாது. அது கழிவுகளைச் சாப்பிட ஒரு மீடியம் தேவைப்படுகிறது. அந்த மீடியம்தான் மாட்டுச்சாணம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்