மாடித்தோட்டம்... முழுமையான வழிகாட்டி!

வீட்டுத்தோட்டம்

``ரசாயனங்கள் பயன்படுத்தி விளையும் காய்கறிகளைத் தவிர்க்க வேண்டும். இயற்கையாக விளைவிக்கப்படும் காய்கறிகளை உண்ண வேண்டும் என்கிற விழிப்பு உணர்வு பெருகி வருவதால், வீட்டு மொட்டைமாடிகளில் தோட்டம் அமைப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. சென்னையில் மட்டும் தற்போது சுமார் 20,000 ஏக்கர் அளவுக்கு மொட்டைமாடிகள் காலியாக உள்ளன. இவற்றில் 3 - 5 சதவிகித பரப்பளவில் மட்டுமே மாடித்தோட்டம் இருக்கிறது. வரும் காலங்களில் இது அதிகரிக்கும் என்பதுடன், மற்ற நகரங்களிலும் இது பரவலாகும்’’ என்று நம்பிக்கை பொங்க சொல்கிறார் தோட்டக்கலைத்துறையில் இணை இயக்குநராக பணியாற்றி ஓய்வுபெற்ற தங்கவேலு.

மாடித்தோட்டம் அமைப்பதற்கான முழுமையான வழிகாட்டலை அவரிடமே கேட்டபோது, வரிவரியாக விளக்க ஆரம்பித்துவிட்டார்.

தொட்டிக்கலவை!

``மாடித்தோட்டத்துக்கான தொட்டிகளில் வெறும் மண்ணைப் பயன்படுத்தி செடிகளை வளர்ப்பதைவிட செம்மண், தேங்காய்நார்க் கழிவு இரண்டையும் கலந்து தொட்டிகளில் நிரப்பி அவற்றில் வளர்க்கும்போது கூடுதல் பலன் கிடைக்கும். வெறும் செம்மண்ணில் தண்ணீர் விட்டால் இறுகிவிடும் என்பதால் அடிக்கடி கொத்திவிட வேண்டியிருக்கும். தேங்காய் நார்க்கழிவைச் சேர்த்தால், அடிக்கடி கொத்திவிடத் தேவையிருக்காது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்