சிட்டியின் நடுவில் ஒரு சிங்கார சோலை!

தோட்டக்கலை

சென்னை, முகப்பேரில் உள்ள தங்கள் வீட்டை ஒரு குட்டிச் சோலை ஆக்கி, குளுகுளுவென வசிக்கிறார்கள் ஜஸ்வந்த் சிங் - மகேந்திர கௌர் தம்பதி. கண்களை அலுத்துப்போகச் செய்யும் கான்கிரீட் கட்டடங்களுக்கு நடுவில் செடிகள், கொடிகள், பூக்கள், மரங்கள், புல்தரை என இருக்கும் இவர்கள் வீடு தரும் அனுபவம், ஓர் ஆச்சர்ய ஆனந்தம்!

“நான் பிறந்து வளர்ந்தது பஞ்சாப். என் கணவருக்கு சொந்த ஊர் சென்னை. அவர் சிவில் இன்ஜினீயர். அவருக்கு தோட்டக்கலையில் அதிக ஆர்வம். 35 வருஷமா செடிகள் வளர்க்கிறோம். முதன்முதலா ஒரு துளசிச் செடிதான் வெச்சேன். காலப்போக்கில் பூச்செடிகளில் இருந்து `போன்சாய்' மரங்கள் வரை வைக்கவும், வளர்க்கவும் கத்துக்கிட்டு, நானும் என் கணவரும் கலையும் கனவுமா எங்க வீட்டுத் தோட்டத்தை வளர்த்தெடுத்தோம்’’ என்கிறார் மகேந்திர கௌர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்