டிப்ஸ்... டிப்ஸ்...

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ100

ரண்டு பிரெட் ஸ்லைஸ்களுக்கு இடையே ஜாம் தடவி நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். மைதாவில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு போல கலக்கவும். நறுக்கிய பிரெட்டை அதில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுத்தால், ஸ்வீட் பஜ்ஜி ரெடி. குழந்தைகள் இதனை விரும்பிச் சாப்பிடுவார்கள்.

- வே.இராமலக்ஷ்மி, திருநெல்வேலி


சாம்பாரில் காரம் கூடிவிட்டால், சிறிதளவு தக்காளி கெட்ச்சப் சிறிது ஊற்றிக் கலந்து, சிறிதளவு பெருங்காயப் பொடியை எண்ணெய் அல்லது நெய்யில் வறுத்துச் சேர்த்துக் கிளறுங்கள்.

- நளினி சுந்தரராஜன், பள்ளிக்கரணை

ப்பாத்தி, பூரி இவற்றை இரவில் சாப்பிடும் சிலருக்கு ஜீரணம் ஆகாமலும், நெஞ்சு எரிச்சசல் ஏற்பட்டும் அவதிப்படுவார்கள். அவர்கள் ஒரு கரண்டி தயிரில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால், இந்த உபாதை நீங்கும்.

- அ.திவ்யா, காஞ்சிபுரம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்