ஒரு டஜன் யோசனைகள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
- வீட்டுக் கடன்... வழிகாட்டும் தகவல்கள்!

வீட்டுக் கடன் பற்றி அறிந்துகொள்ள வேண்டிய அடிப்படைத் தகவல்களை ஒரு டஜன் யோசனைகளாக  வழங்குகிறார், பஞ்சாப் நேஷனல் வங்கி போரூர் கிளையின் மேலாளர் அழகப்பன் கிருஷ்ணன்.

1. எதற்கெல்லாம் கடன்..?

புதிதாக வீடு கட்ட மட்டுமே வங்கி களிடம் வீட்டுக் கடன் பெறலாம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், புதிதாக இடம் வாங்கி வீடு கட்டவும், கட்டிய வீடுகளை வாங்கவும், பழைய வீட்டைப் புதுப்பித்துக் கட்டவும்கூட வங்கிக் கடன் பெறலாம்.

2. கடன் சதவிகிதம்

வீடு கட்டத் தேவையான முழுப் பணத்தையும் வங்கிகள் கடனாக அளிக்காது. வீட்டின் மொத்த மதிப்புத்தொகையில் 75%  முதல்  80% வரை மட்டுமே கடன் பெற முடியும்.

3. கடன் தொகை எப்படி வழங்கப்படும்?

புதிதாக வீடு கட்டுகிறவர்கள் எனில், கட்டுமான வேலை முடிய முடிய, கடன் தொகையை மூன்று அல்லது நான்கு தவணைகளாகப் பிரித்து வங்கிகள் வழங்கும். கட்டிய வீட்டை வாங்கும்போது செலுத்த வேண்டிய தொகையில் 75%  முதல் 80%  தொகையை எந்த பில்டரிடமிருந்து அல்லது எந்த நபரிடமிருந்து வீடு வாங்கப் போகிறீர்களோ அவரின் கம்பெனி அல்லது அவரின் பெயருக்கு  டிமாண்ட் டிராஃப்ட் ஆக வங்கி கொடுக்கும்.

4. எவ்வளவு கிடைக்கும்?


வீட்டைப் பழுது பார்க்க அல்லது புதுப்பித்துக்கட்ட 20 லட்சம் ரூபாய் வரை கடன் கிடைக்கும். மனை மட்டும் வாங்க, 50 லட்சம் ரூபாய் வரை கடன் தொகை கிடைக்கும். இவை வங்கிக்கு வங்கி மாறுபடும்.  கட்டிய வீட்டை வாங்க அல்லது புது வீடு கட்ட, உங்கள் சம்பளம் மற்றும்  வாங்கப் போகும்  சொத்தின் மதிப்பு அடிப்படையில் கடன் வழங்கப்படும்.

5. தகுதி

வீட்டுக்கடன் பெற குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது 65. கடன் வாங்குபவரின் மாத சம்பளம்  1 லட்சம் ரூபாய்க்கு  கீழ் எனில், சம்பளத் தொகையில் 50%  தவணையாக கட்டும் விதமாக கடன் தொகை இருக்கும். இதுவே சம்பளம்  ஒரு லட்சத்துக்கு மேல் எனில், சம்பளத் தொகையில் 60 சதவிகிதம்  மாத தவணையை கட்டும் விதமாக கடன் கிடைக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்