வேதனைப்படுத்தும் வாய்ப்புண்... விடுபடும் வழிமுறைகள்!

ரியாக சாப்பிடாமல் அவசர அவசரமாக கல்லூரிக்கு செல்லும் இளம்பெண்கள் பலரும் வாய்ப்புண்ணால் அவதியுற்று வருகிறார்கள். உணவை உட்கொள்ளும் வாயில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் பார்த்துக்கொள்வது ரொம்ப முக்கியம் கேர்ள்ஸ்!

“நேரத்துக்கு உணவு உட்கொள்ளாத காரணத்தால் முதலில் சிறிதாகத் தோன்றும் வாய்ப்புண் கவனிக்காமல் விடும்போது குழிப்புண்ணாக மாறிவிடும். பேச, சிரிக்க, சாப்பிட என எல்லாவற்றுக்கும் `செக்' வைக்கும். எனவே, ஆரம்பத்திலேயே அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்வது முக்கியம்’’ என்று சொல்லும் மதுரையைச் சேர்ந்த பொது மருத்துவர் ஸ்வேதா ரவிச்சந்திரன், அது குறித்த விழிப்பு உணர்வு தகவல்கள் தந்தார்.

வாய்ப்புண் எதனால் ஏற்படுகிறது?

வாய்ப்புண், ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு திறன் குறைவாக உள்ளவர்கள், வயிற்றுப்புண் கொண்டவர்களையே அதிகம் தாக்குகிறது. எந்நேரமும் வேலை, டென்ஷன், ஸ்ட்ரெஸ் என இருக்கும் பெண்களுக்கும் வாய்ப்புண் வர வாய்ப்புகள் அதிகம். மேலும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தினாலும் சிலருக்கு வாய்ப்புண் ஏற்படலாம். உணவு உண்ணும்போது உதடுகளிலும், வாயின் உட்பகுதியிலும் பல் குத்துவதாலோ அல்லது கடித்துக்கொள்வதாலோகூட புண் ஏற்படலாம். சிலருக்கு ஒவ்வாமையாலும் வாய்ப்புண் வரலாம். சமயங்களில் காலாவதியான லிப்ஸ்டிக் அல்லது லிப்பாம்கூட ஒவ்வாமை ஏற்படுத்தி வாய்ப்புண்ணுக்குக் காரணமாகலாம்.

செய்ய வேண்டியவை!

வைட்டமின் B-12, இரும்புச்சத்து, ஃபோலிக் ஆசிட் குறைபாட்டால் வாய்ப்புண் ஏற்படும் என்பதால், இந்தச் சத்துகள் மிகுந்த உணவு வகைகளை முக்கியத்துவம் கொடுத்து எடுத்துக்கொண்டால், தானாகவே வாய்ப்புண் குணமாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்