நோய் நாடி..! - வயிற்றுவலி... ஏன் வருகிறது... எப்படி சரிசெய்வது?

நோயை வெல்வதற்கான முதல் படி, அதைப் பற்றிய விழிப்பு உணர்வை வளர்த்துக்கொள்வதுதான். அந்த வகையில், தொடர்ந்து நோய்களைப் பற்றி வெளிச்சம் தந்துவரும் ‘நோய்நாடி’ பகுதியில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் எதிர்கொண்டு வரும் வயிற்றுவலி பிரச்னை குறித்த மருத்துவ விளக்கங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார், சென்னை, அப்போலோ மருத்துவமனையின் ஜீரண மண்டல அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் ரவீந்திரன் குமரன்.

‘‘உணவுக்குழல் முதல் ஆசன வாய் வரை உள்ள பகுதியை ஜீரண மண்டலம் என்றும் வயிற்றுப் பகுதி என்றும் சொல்லலாம். இதில் உணவுக்குழல், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல், ஆசனவாய் போன்ற முக்கிய உறுப்புகளும்... கல்லீரல், மண்ணீரல், கணையம் போன்ற சார்ந்த உறுப்புகளும் இருக்கின்றன. இவை தவிர சிறுநீரகம், பெண்களுக்கு கர்ப்பப்பை, சினைமுட்டைப்பை போன்றவையும் இருக்கும். சாப்பிட்ட உணவை ஜீரணித்து வெளியேற்றுவது மட்டும்தான் வயிற்றின் வேலை என பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அதைத் தாண்டி, உடலில் சர்க்கரையின் அளவை சமநிலையில் வைத்திருப்பது, தேவையற்ற பொருட்களை உடலுக்குள் தங்கவிடாமல் கழிவாக மாற்றி வெளியேற்றுவது உள்ளிட்ட இன்னும் பல வேலைகளும் அதன் பொறுப்பு. அதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், அதை வெளிப்படுத்தும் அறிகுறியே வயிற்றுவலி என்பதால், அதை கவனிக்காது விட்டுவிடாமல் உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டும்’’ என்ற வலியுறுத்தலுடன் விளக்கங்களைத் தொடர்ந்தார் டாக்டர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்