கணிதத்தில் முன்னேற பல்லாங்குழி... கவனத்தை நிலைப்படுத்த நூற்றாங்கல்!

விளையாட்டை சிகிச்சையாக்கும் ப்ரீத்த நிலா...பாரம்பர்யம்

செவித்திறன் குறைபாடு, ஹைப்பர் ஆக்டிவிட்டி, ஒபிஸிட்டி, சோர்வு என்று இப்படி ஏதாவது ஒரு பிரச்னையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, ஆயுர்வேத மருத்துவர் மற்றும் மனநல ஆலோசகரான ப்ரீத்த நிலா பரிந்துரைக்கும் சிகிச்சை... பல்லாங்குழி, பரமபதம், தட்டாங்கல், நூற்றாங்கல், கிட்டி என்று நம் பாரம்பர்ய விளை யாட்டுக்கள். இதற்காகவே, ‘கற்றல் இனிது’என்ற அமைப்பை, தேனியில் சில மாதங்களுக்கு முன் நிறுவியவருக்கு வரவேற்பு அதிகமாக, உற்சாகத்தில் இருக்கும் ப்ரீத்த நிலா வுடன் பேசினோம்...

‘‘அம்மா, நான், என் கணவர் அனைவரும் மருத்துவர்கள்.  எப்போதும் பரபரப்பாக இருக்கும் பணிச்சூழலால் வீட்டில் இருக்கும் குழந்தைகளை முழு நேரமும் கவனிக்க முடியாமல்போக, அவர்கள் வீடியோ கேம்ஸ், இன்டர்நெட் என்று டெக் உலகில் மூழ்கினார்கள். இதனால்   கண் பிரச்னை, தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளும் குணம் உட்பட பல பிரச்னைகளுக்கு ஆளானார்கள்.

குழந்தைகளை டெக்னா லஜியிடம் இருந்து மீட்க என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, அதைவிட சுவாரஸ்யமான ஒன்றை அவர்களிடம் கொடுக்க வேண்டும் என்று புரிந்தது. அதற்காக நான் தேர்ந்தெடுத்தது, நம் பழந்தமிழர் விளையாட் டுகள். அதைப் பற்றித் தேடித் தேடிப் படித்து அறிந்துகொண்டேன். அப்போதுதான், மூளை, மனம், உடல் என்று மூன்றின் ஆரோக்கியத் தையும் வளப்படுத்தவல்ல அந்த விளையாட்டுகள், வழக்கிழந்து போன துயரம் என்னை பாதித்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்