அன்றாட வாழ்க்கையில், அழகு... ஆரோக்கியம்!

பியூட்டி அண்ட் ஹெல்த் ஸ்பெஷல்

தினமும் வீட்டில் செய்து கொள்ளக்கூடிய, செய்துகொள்ள வேண்டிய அழகு, ஆரோக்கியத் துக்கான விஷயங்களைச் சொல் கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர், டாக்டர் கருணாநிதி.

குளித்து முடித்ததும் சூரிய வெப்பம் படக்கூடிய கை போன்ற பகுதிகளில் எண்ணெய் தடவியதும் வெளியே சென்றால், சூரிய கதிர்வீச்சால் சருமம் பாதிக்கப்படாது.

வெளியே சென்று வந்ததும் குளிர்ந்த நீரில் முகம், கை - கால்களைக் கழுவவும். பாத்ரூமுக்கு சென்றுவந்த பிறகும், சாப்பிடும் முன்பும் நிச்சயமாகக் கை கழுவவும்.

நம் நாட்டின் வெப்பமான சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப இறுக்க மான ஆடைகளைத் தவிர்க்கவும்; காட்டன் ஆடைகளை அணியவும்.

10 அடி இடைவெளியில் டி.வி பார்க்கவும். தொடர்ந்து டி.வி, கணினி, ஸ்மார்ட்போன் பார்க்க நேரிட்டால், இடையிடையே சிறிது நேரம் கண்களை மூடி ஓய்வு கொடுப் பது, கண் எரிச்சலைத் தடுக்கும்.

பசிக்கு மட்டும் சாப்பிடவும். உயரத்துக்கு ஏற்ற எடையைப் பராமரிக்கவும் [உயரம் (செ.மீ) - 100 என்பதே சரியான எடை. உதாரண மாக, உயரம் 155 செ.மீ எனில், 55 கிலோ என்பதே உடலுக்கேற்ற எடை]. திடீரென உடல் எடையில் மாற்றம் ஏற்பட்டால்,  உடனடியாக மருத்துவரை அணுகவும். அதற்காக 1 கிலோ, 2 கிலோ குறைந்தாலோ கூடினாலோ பதற தேவையில்லை.

மதிய உணவுக்குப் பிறகு அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை தூங்கலாம். இரவில் 6-8 மணி நேரத் தூக்கம் அவசியம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்