அடுக்களையிலேயே அழகாகலாம்! - 5

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
வெள்ளரிக்காய் மேஜிக்!

“டல் சருமம், இந்த வெயில்லயும் சும்மா டாலடிக்கணுமா...  அப்போ வெள்ளரிக்காய் செய்யும் மேஜிக்கை ட்ரை பண்ணிப் பாருங்களேன். சருமத்துக்கு ஆரோக்கியமான அழகை வழங்குவதில் வெள்ளரிக்காய்க்கு நிகரானது அதுவேதான். எல்லா சீஸனிலும் கிடைக்கக்கூடிய மற்றும் எல்லோராலும் எளிதில் வாங்கக்கூடிய வெள்ளரிக்காய்தான் இந்த இதழ் பியூட்டி பகுதிக்கான பொருள்'' எனும் அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி அளிக்கும் பியூட்டி டிப்ஸ் இதோ...

இயற்கை சருமத்தை மீட்க...

வெள்ளரிக்காயின் தோல் மற்றும் விதைகளை நீக்கிவிட்டு, மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து ஜூஸாக்கவும். இதை வடிகட்டியின் மூலம் வடிகட்டிவிட்டு, மறுபடியும் ஒரு காட்டன் துணியில் வடிகட்டவும். மிகமிக தெளிவான இந்த வெள்ளரி சாற்றை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, குறைந்தது பதினைந்து நிமிடங்கள் ஊறவிடவும். உலர்ந்ததும் ஜில் தண்ணீரில் கழுவவும். இதை தினமும் ஒருமுறை செய்வதனால், பாதிக்கப்பட்ட சருமம் மீண்டும் இயற்கை நிலையை அடையும்.

பிளாக் ஹெட்ஸ் நீக்கும் மிக்ஸ்!

ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு தயிர் மற்றும் வெள்ளரிக்காய் சாற்றை சரிசமமான விகிதத்தில் எடுத்துக்கொள்ளவும். அதனை பீட்டர் (beater) அல்லது ஸ்பூனால் நன்கு அடித்துக் கலக்கவும். இந்தக் கலவையை கண் இமைகளுக்கு மேல் மற்றும் உதடுகள் என முகம் முழுவதும் தடவவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீரால் கழுவவும். தினசரி காலை மற்றும் இரவு என தொடர்ந்து செய்துவந்தால் மூக்கின் ஓரங்களில் தங்கும் கரும்புள்ளிகள் காணாமல் போகும்; முகம் பளிச்சென மாறும்.

பளிங்கு முகத்துக்கு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்