ஸ்மார்ட்போன் டேட்டா... சேமிப்பது எப்படி?!

ன்று ஸ்மார்ட்ஃபோன் இல்லாதவர்களை அதிசயமாகப் பார்க்கும் நிலையில் இருக்கிறோம். அந்த போன்களில் இருக்கும் ஸ்மார்டர் ஆப்ஷன்களை உபயோகிக்க, இணையம் அவசியம். ‘எவ்வளவு ரூபாய்க்கு நெட் பேக் போட்டாலும் சீக்கிரம் தீர்ந்துடுது’ என புலம்பாத யூத்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இதோ... உங்கள் மொபைல் டேட்டாவை சேமிக்கக் கைகொடுக்கும் வழிகள்!

ஆப்ஸ்

‘சும்மா ட்ரை பண்ணிப் பார்க்கலாமே’ என்று ஏகப்பட்ட `ஆப்’களை அதன் தேவை இல்லாமல் டவுன்லோடு செய்வதற்கு, டேட்டா உறிஞ்சப்படும். எனவே, ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து, அவசியமான `ஆப்’களை மட்டும் பதிவிறக்கம் செய்யவும். மேலும், மொபைல் செட்டிங்ஸில் ‘டேட்டா யூசேஜ்’ ஆப்ஷனில் சென்று பார்த்தால், எந்த `ஆப்’புக்காக அதிகளவு டேட்டா செலவழிக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். இதில் நீங்கள் அதிகம் உபயோகிக்காத, ஆனால், டேட்டா இழுக்கக்கூடியதாக இருக்கும் `ஆப்’களை அன்இன்ஸ்டால் செய்துவிடுங்கள். 

ஆட்டோ அப்டேட்

கூகுள் ப்ளே ஸ்டோர் ஆட்டோ அப்டேட் ஆப்ஷனில் இருந்தால், உங்கள் நெட் பேக் ஸ்வாகாதான். எனவே, ப்ளே ஸ்டோரில் சென்று ஆட்டோ அப்டேட் ஆப்ஷனிலிருந்து ‘Do not auto-update apps’ அல்லது ‘Auto-update apps over Wi-Fi only’ என்ற ஆப்ஷனை செட் செய்யுங்கள்.

கூகுள் மேப்ஸ்

கூகுள் மேப்ஸும் டேட்டாவை அதிகளவில் செலவழிக்கவைக்கும். எனவே, அதை முடிந்தவரை ஆஃப்லைனில் பயன்படுத்துங்கள்.

பேக்கிரவுண்ட் டேட்டா

பேக்கிரவுண்ட் டேட்டாக்களை குறைப்பதன் மூலம் டேட்டாவை அதிகளவு தக்கவைக்க முடியும். அதற்கு, செட்டிங்ஸில் ‘டேட்டா யூசேஜ்’-ல் ‘ரெஸ்ட்ரிக்டட் பேக்கி ரவுண்ட் டேட்டா’ ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க... சுபம்.

மியூசிக் ஆப்ஸ்

இன்னிசையில் கரைய நீங்கள் இன்ஸ்டால் செய்யும் மியூசிக் `ஆப்’கள் அனைத்தும், டேட்டாவுக்கான `ஆப்’தான். எனவே, பாடல்களை உங்கள் `மைக்ரோ எஸ்டி’ கார்டில் சேமிப்பது சிறந்த வழி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்