பயோடெக்னாலஜி படிப்பு... `பலே' வேலைவாய்ப்பு!

யிர் தொழில் நுட்பவியல் எனப்படும் பயோடெக்னாலஜி இன்று உணவு, மருத்துவம், விவசாயம் போன்ற துறைகளில் தனது முத்திரையை அழுத்தமாகப் பதித்துவருகிறது. அத்துறையில் உள்ள படிப்புகள், அதன் எதிர்காலம், வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்களைத் தருகிறார் சேலம், ஜெய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உயிர் தொழில்நுட்பவியல் துறையின் தலைவர் கே.சி.பி. ராஜாமணிகண்டன்.

பயோடெக்னாலஜி என்றால் என்ன?

ஒவ்வொரு உயிரிலும் உள்ள செல்லின் செயல்பாட்டையும், அதன் மூலக்கூறுகளின் செயல்பாட்டையும் வைத்து தொழில்நுட்பம் மூலம் நமக்குத் தேவையான பொருட்களைத் தயாரிக்க உதவுவது, பயோடெக்னாலஜி. உதாரணமாக, நுண்ணுயிர்கள் மூலம் மனித நோய்களுக்கு மருந்து தயாரிக்கவும், நோய்களைத் தடுக்கவும், சுவையான உணவுப் பொருட்களை என்சைம் மூலம் பல நாட்கள் கெடாமல் பாதுகாக்கவும், விவசாயத்தை மேம்படுத்தவும் என இந்த உயிர் தொழில்நுட்பத்தின் தொழில்நுட்ப முறைகள் இனி வரும் காலங்களில் நமக்கு அவசியமாகும்.

சிலபஸ்

ஜெனிட்டிக்ஸ், செல் பயாலஜி, இம்யூனாலஜி, மைக்ரோ பயாலஜி, ஆர் டிஎன்ஏ டெக்னாலஜி, பிளான்ட் பயோடெக்னாலஜி, அனிமல் பயோடெக்னாலஜி, பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ் உள்ளிட் டவை பாடத்திட்டங்களாக விரியும் துறை இது.

கல்வித்தகுதி

பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம், உயிரியல், ப்யூர் சயின்ஸ், பயோ பாட்டனி, பயோ ஜூவாலஜி, நர்ஸிங், பயோ அக்ரி பாடப்பிரிவுகளில் படித்த மாணவர்கள், மூன்று வருடப் படிப்பான பி.எஸ்ஸி., பயோ டெக்னாலஜி அல்லது நான்கு வருடப் படிப்பான பி.டெக்., பயோடெக்னாலஜி படிக்க விண்ணப்பிக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்