ஆச்சியோட ஆவியும்... கொளப்புள்ளி லீலாவும்!

வெள்ளித்திரை

மீபத்தில் திரைக்கு வந்த ‘மருது’ திரைப்படத்தில் நடிகர் விஷாலின் அப்பத்தாவாக சிறப்பாக நடித்து பலரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியிருக்கிறார், மலையாள நடிகை `கொளப்புள்ளி' லீலா. மல்லுவுட்டில் அவர் பிஸி. என்றாலும் நாம் பேட்டிக்குக் கேட்டதும், உடனடியாக நேரம் ஒதுக்கினார். மலையாளமும் தமிழும் கலந்த அந்தப் பேச்சு... தனி அழகு! 

‘‘அஞ்சு வயசுலேயே மேடை நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன். ஏழாம் வகுப்போட படிப்பை நிறுத்திட்டு, முழு நேரமா நடிக்க ஆரம்பிச்சு, நூற்றுக்கணக்கான நாடகங்கள்ல நடிச்சேன். ஒருமுறை என்னோட நாடகத்தைப் பார்த்த மலையாள இயக்குநர் கமல் சார், அவரோட ‘அயல் கதா எழுத்துக்கயனு’ படத்துல சான்ஸ் கொடுத்தார். அப்படியே துணை நடிகை, குணச்சித்திரம், காமெடி, வில்லி கேரக்டர்னு 350-க்கும் அதிகமான மலையாளப் படங்களில் நடிச்சேன். மம்முட்டி, மோகன்லால் எல்லாரோடயும் நடிச்சுட்டேன்.  

கல்யாணத்துக்கு அப்புறம் நான் கொளப்புள்ளி என்ற ஊர்ல குடும்பத்தோடு செட்டில் ஆக, என்னோட பெயரும் ‘கொளப்புள்ளி’ லீலாவா மாறிடுச்சு. இந்த வருஷத்தோடு நான் நடிக்க ஆரம்பிச்சு 50 வருஷம் ஆகுது’’ என்று எளிமையாகப் பேசிய அந்த சீனியர், கோடம்பாக்க என்ட்ரி பற்றிப் பேசும்போது உற்சாகமாகிறார்.

‘‘நான் தமிழ்ல ‘கஸ்தூரிமான்’ உள்ளிட்ட சில படங்கள்ல சின்னச் சின்ன கேரக்டர்களில் நடிச்சிருக்கேன். டைரக்டர் முத்தையா சார், ‘கஸ்தூரிமான்’ படத்தைப் பார்த்திருக்கார். அதுல என்னோட நடிப்பு அவருக்கு ரொம்பவே பிடிச்சுப்போக, அவரோட ‘மருது’ படத்துல விஷாலின் அப்பத்தாவா என்னை நடிக்கவைக்க முடிவெடுத்திருக்கார். உடனடியா அவரோட அசிஸ்டன்ட் பாண்டி சார், ‘நீங்கதான் மருதுவோட அப்பத்தா, நாங்க முடிவு பண்ணிட்டோம்’னு எங்கிட்ட பேசினார். ‘அட, கதையைச் சொல்லுங்கப்பா’னு கேட்க... கதை, என் கேரக்டர் பத்தி எல்லாம் சொன்னார். எனக்குப் ரொம்பப் பிடிச்சிருந்தது. ஆனா, சென்னை தமிழ் கொஞ்சம் தெரியும், மதுரை தமிழ் எல்லாம் எனக்கு சுத்தமா தெரியாது என்பதால யோசிச்சேன். ‘அதெல்லாம் நீங்க செஞ்சிருவீங்க அப்பத்தா’னு ‘மருது’ டீம் எனக்கு நம்பிக்கை கொடுத்தாங்க’’ என்றவர், தன் நடிப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்