நோய் நாடி..! - காக்க... காக்க... கண் நலம் காக்க!

கம்ப்ளீட் மெடிக்கல் கைடு!

நோயை வெல்வதற்கான முதல் படி, அதைப் பற்றிய விழிப்பு உணர்வை வளர்த்துக்கொள்வதுதான். அந்த வகையில் தொடர்ந்து நோய்களைப் பற்றி வெளிச்சம் தந்துவரும் ‘நோய் நாடி’ பகுதியில்... கண் நோய்கள், அவற்றுக்கான பரிசோதனைகள், சிகிச்சைகள், வாழ்வுமுறை தீர்வுகள் பற்றி விளக்கமாகச் சொல்கிறார், சென்னை - ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் மூத்த துணைப் பேராசிரியரும், கண் பார்வை சிறப்பு அறுவை மற்றும் லேசர் சிகிச்சை நிபுணருமான டாக்டர் வெங்கடேஷ்.

‘‘புலன்களில் தனிச்சிறப்பு வாய்ந்த கண், ஒளி உணரும் தன்மைகொண்ட ஒரே உடல் உறுப்பு. அதில் பிரச்னை ஏற்படாத வகையிலான வாழ்க்கை முறையை உணவு, பயிற்சி என்று கட்டமைத்துக்கொள்வதும், கண் பிரச்னைகளை வளரவிட்டு சிகிச்சையற்ற நிலைக்கு கொண்டுவந்து நிறுத்தாமல் ஆரம்பித்திலேயே குணமாக்கிக்கொள்ள வேண்டியதும் முக்கியம்’’ என்ற அறிவுறுத்தல் தந்து ஆரம்பித்தார் டாக்டர்...

குழந்தைகளின் பார்வைக் குறைபாடுகள்!

கண் நலனில் குழந்தைப் பருவம் மிகமிக முக்கியமானது. சில குழந்தைகள் கண்களைச் சுருக்கிப் பார்ப்பார்கள், சிலர் தாடையைச் சாய்த்து மேல்நோக்கிப் பார்ப்பார்கள், சிலர் டி.வி-யை அருகில் உட்கார்ந்து பார்ப்பார்கள், சிலர் சைடாக அமர்ந்து பார்ப்பார்கள். இப்படி ஒரு காட்சியைப் பார்க்கும் விதத்தில் இயல்பாக இல்லாமல் குழந்தைகளிடம் ஏதாவது வித்தியாசம் தென்பட்டால், அவர்கள் கண்பார்வையில் ஏதோ சிரமம் இருக்கிறதென்று அர்த்தம். உடனடியாக மருத்துவரை அணுகி கண் பரிசோதனை செய்துகொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும்.

குழந்தைகளின் மாறுகண்... எவ்வளவு விரைவாக இயலுமோ அவ்வளவு விரைவாக சிகிச்சையளிக்க வேண்டிய பிரச்னை. இல்லையென்றால் ஒரு கண்ணில் பார்வை முற்றிலும் தெரியாமல்போவதுவரை செல்லலாம். மேலும் டிரைவிங் லைசன்ஸ் தொடங்கி பல ஆவணங்களைப் பெறுவதிலும் அது சிக்கலை ஏற்படுத்தலாம். இந்த 21-ம் நூற்றாண்டிலும் மாறுகண் அதிர்ஷ்டம் என்று நம்புவது முட்டாள்தனம். மாறுகண்ணை மருத்துவத்தில் சோம்பேறிக் கண் (lazy eye) என்போம். இதற்கு ஆரம்ப நிலையிலேயே கண்ணாடி அணிவது, அறுவை சிகிச்சை என பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்து சிகிச்சையளிக்க வேண்டும். அப்படி சரிசெய்யாமல் விட்டால், அந்தக் குழந்தையின் பார்வையை இயல்பு நிலையில் வைத்திருப்பது கடினம். மாறுகண்ணிலிருந்து வரும் பிம்பம் மாறுபட்ட பிம்பம்; இதனை மூளை சரிவர ஏற்காது என்பது குறிப்பிடத்தக்கது. 

டாப் 4 கண் பிரச்னைகள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்