அழகுக்கு அஸ்திவாரம்... குழந்தைப் பருவத்திலேயே!

பியூட்டி

ங்கள் குழந்தைகள் வளர்ந்த பின்னும் சருமத்தின் வனப்பு இழக்காமல் இருக்க, குழந்தைப் பருவத்தில் செய்ய வேண்டிய அழகுப் பராமரிப்புகளை சென்ற இதழின் தொடர்ச்சியாக, இங்கே வழங்குகிறார், சென்னை, ‘கேர் அண்ட் க்யூர்’ அரோமா கிளினிக்கின் நிர்வாகி கீதா அஷோக்.

5 முதல் 10 வயது குழந்தைகளுக்கு...

கேசம் 

 குழந்தைகளுக்கு முடியை நீளமாக வளர்ப்பதைவிட, குட்டையாக வெட்டிவிடுவதுதான் பராமரிக்க எளிமையாக இருக்கும்... அதன் ஆரோக்கியமும் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும்.

 வெள்ளை கரிசலாங்கண்ணி கீரை, கறிவேப்பிலை, கீழாநெல்லி, அவுரி இலை இவை அனைத்திலும் தலா ஒரு கைப்பிடி எடுத்து, நன்கு அரைத்து, அத்துடன் 100 கிராம் கடுக்காய் பொடி கலந்து சிறு சிறு வடைகளாகத் தட்டி வெயிலில் நன்கு காயவைத்து எடுக்கவும். 5, 6 வடைகளை ஒரு பாட்டிலில் உதிர்த்து, அதில் 100 மில்லி ஆலிவ் ஆயில், 50 மில்லி பாதாம் ஆயில் சேர்த்து, மூன்று நாட்கள் வெயிலில் வைத்து எடுக்கவும். இதை வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறவிட்டுக் குளிக்கவைக்க, கேசம் போஷாக்குடன் இருக்கும்.

சருமம்

ஒரு துண்டு மஞ்சள்பூசணிக் காயின் சதைப்பகுதியை தேவையான அளவு பால் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, அதனுடன் 2 ஸ்பூன் ஆவாரம் பூ பொடியைக் கலந்து, வார இறுதி நாட்களில் குழந்தையின் முகம் மற்றும் உடல் முழுவதும் தேய்த்து 10 நிமிடம் ஊறவைத்துக் குளிக்கவைக்க, சருமம் மினுமினுப்பதுடன் நிறமும் கூடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்