கொசுமருந்து பாட்டிலில் குட்டிப் பிள்ளையார்!

கிராஃப்ட்

ல்லங்களில் நீங்கள் உபயோகித்த பேப்பர் கப், டிஷ்யூ பேப்பர் ரோலின் நடுவே இருக்கும் உருளை, கொசுவிரட்டும் திரவ பாட்டில்கள், பழைய செய்தித்தாள், (ஷட்டில்) கார்க், இருமல் மருந்து பாட்டில், தாம்பூலப் பைகள்... இன்ன பிற பொருட்களை எல்லாம் என்ன செய்வீர்கள்? எடைக்குப் போடுவீர்கள், அல்லது குப்பையில் போடுவீர்கள்... அப்படித்தானே?!

ஆனால், இவற்றை எல்லாம் சென்னை கோட்டூர்புரத்திலுள்ள சீனியர் சிட்டிசன் இந்திராணி சுவாமிநாதனிடம் கொடுத்தால், நிமிடங்களில் அவற்றிலிருந்து பொம்மை, பிள்ளையார், ஃப்ளவர் வாஸ், பென் ஸ்டாண்ட், கதவு நிலை தோரணம், மாலை என்று அழகிய கலைப்பொருட்களாக மாற்றிவிடுகிறார். தன் கற்பனைத்திறனாலும் படைப்பாற்றலாலும், வேஸ்ட் பொருட்களை வைத்து இவர் செய்திருக்கும் பொருட்களை வைத்து ஒரு கேலரியே வைக்கலாம். ‘அவள்’ வாசகிகளுக்காக கொசு விரட்டும் திரவ பாட்டிலில் பிள்ளையார் செய்யக் கற்றுத்தருகிறார் இந்திராணி.

தேவையான பொருட்கள்:


காலி கொசுமருந்து பாட்டில் - ஒன்று, வண்ணமிகு துணி (பிளவுஸ் துணியில் வெட்டி எறியும் பார்டர் போன்றது), அதே நிறம் மற்றும் வெள்ளை நிறத்தில் நூல், ஊசி, ஜரிகை லேஸ், சம்கிகள் (அழகுபடுத்த), ஃபோம் ஷீட் (புதிய ஷர்ட்களில் மடிப்புக்காக உள்ளே வைக்கப்பட்டிருக்கும்), கேன்வாஸ் - சிறிய துண்டு, மிகச் சிறிய சைஸ் ஸ்டிக்கர் பொட்டு - கறுப்பு, சிவப்பு வண்ணங்களில், வெள்ளி நிற லேஸ் (விபூதிப் பட்டைக்கு), பழைய இன்விடேஷன் அட்டை (கிரீடம் செய்ய), குண்டூசி, பசை, கறுப்பு மற்றும் சிவப்பு மார்க்கர் பேனாக்கள் அல்லது ஸ்கெட்ச் பேனாக்கள்.

செய்முறை:

படம் 1: முதலில், பார்டர் துணியை பாட்டிலின் சுற்றளவுக்கு அளந்து, 1 இன்ச் உயரம் அதிகமாக (பாட்டிலின் கழுத்துவரை) வருவதுபோல வெட்டவும்.

படம் 2: அந்தத் துண்டுத் துணியை, பாட்டிலைச் சுற்றிவைத்து, கழுத்தருகே ஓட்டுத் தையல் போட்டு சுருக்கிவிட்டு (சுருக்குப்பையின் வாய் போல), அப்படியே கீழ்நோக்கித் தைக்கவும். இப்போது, பாட்டிலைச் சுற்றி பார்டர் துணி இருக்கும். பிள்ளையாரின் உடை இது.

படம் 3: ஃபோம் ஷீட்டில் 4-க்கு 6 இன்ச் என்ற அளவில் ஒரு செவ்வகத் துண்டை வெட்டி எடுக்கவும்.  பார்டர் துணியில் தைத்த பகுதியை பின்பக்கம் வருவதுபோல பாட்டிலை வைத்துக்கொண்டு, ஃபோம் ஷீட்டின் சிறிய (4 இன்ச்) பகுதியை, பாட்டிலின் கழுத்துக்கு மேலே மூடியின் மேல்வைத்து, இருபக்கமும் உபரியாக இருக்கும் ஃபோமை கீழே மடித்து, வெள்ளை நூலால் தைக்கவும் (பாட்டிலை தலைகீழாகத் திருப்பிப் பிடித்துக்கொண்டு தைத்தால், எளிதாக இருக்கும்). இப்போது பிள்ளையாரின் தலைப் பகுதி தயார்.

குறிப்பு: அதிகமாக இழுக்காமல், நிதானமாகத் தைக்கவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்