வழிகாட்டும் ஒலி!

ஆரத்தி தட்டுகள்... அள்ளலாம் வருமானம்!

‘‘ஆயிரம் ரூபாய் முதலீட்டோட ஆரம்பிச்ச ஆரத்தித் தட்டு பிசினஸ், இப்போ மாசம் பல ஆயிரங்கள் லாபம் எடுக்கிற அளவுக்கு வளர்ந்து நிக்குது, நாலே வருஷத்துல...’’ என, அலங்கார சீர்வரிசைத் தட்டுகள் மற்றும் ஆரத்தி தட்டுகள் பிசினஸ் வெற்றியாளராகப் பேசுகிறார்... ஈரோடு மாவட்டம், பவானியைச் சேர்ந்த திவ்யா.

‘‘இப்போ பெரும்பாலானவங்க திருமணம், கிரகப்பிரவேசம்னு எல்லா விசேஷங்களையும் தடபுடலா நடத்துறாங்க. அதன் ஒரு அங்கமா, சீர்வரிசைகளை எப்படியெல்லாம் அலங்காரமா வைக்கிறாங்க என்பதும் கவனிக்கும் அம்சமா மாறியிருக்கு. விளைவு... அலங்கார சீர்வரிசை மற்றும் ஆரத்தி தட்டுகள் பிசினஸுக்கு தேவையும், வரவேற்பும் எதிர்பார்ப்பும் பெருகிட்டே வருது’’ என்று சொல்லும் திவ்யா, பயிற்சி பெறுவதில் இருந்து லாபம் எடுப்பது வரை, ஆரத்தி தட்டு பிசினஸ் தொடர்பான சக்சஸ் ஆலோசனைகளை ‘வழிகாட்டும் ஒலி’ குரல் ஒலியில் பேசுகிறார். பிப்ரவரி 23 முதல் 29 வரை, 044 -66802912* என்ற எண்ணில் அழையுங்கள்!*சாதாரண கட்டணம்

கு.ஆனந்தராஜ், படம்:ரமேஷ் கந்தசாமி

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick