மெகா பரிசுப் போட்டி வெற்றியாளர்கள்!

வள் விகடன் 18-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி நடைபெற்ற 18 பவுன் தங்கம் மெகா பரிசுப் போட்டியில், அறிவிக்கப்பட்ட 18 போட்டிகளுக்கான வெற்றியாளர் களை தொடர்ந்து அறிவித்து வருகிறோம். ஏற்கெனவே போட்டி எண் 10 வரையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன (8-வது போட்டி குறித்த பரிசீலனை தொடர்வதால், அதன் முடிவுகள் தாமதமாக வெளியாகும்). ‘க்ளிக்’, ‘நானும் அவளும்/அவனும்’, ‘என்னால் ஏற்றம் பெற்ற என் குடும்பம்’ போட்டிகளின் வெற்றியாளர்கள் இங்கே...

 

போட்டி எண் 11: க்ளிக் 

ஸ்ட்ரீட் போட்டோகிராஃபி


வெற்றியாளர்: ரூபா ஹரிணி, திருச்சி நடுவர்: ஃபேஷன் புகைப்படக் கலைஞர் ப.பகத்குமார்

“இந்தப் புகைப்படம் அதில் உள்ள மக்களின் வாழ்வைப் பிரதிபலிக்கிறது. மூன்று தலைமுறை பெண்கள் கைகளிலும் இருக்கும் குடங்கள், பல விஷயங்களைப் பேசுகின்றன. ரூபாவுக்கு வாழ்த்துகள்!’’

போட்டி எண்: 12

நானும் அவளும் /அவனும்


வெற்றியாளர்: தேவிப்பிரியா, சென்னை

நடுவர்: பாரதி பாஸ்கர், பட்டிமன்றப் பேச்சாளர்

‘நிச்சயதார்த்தம் முடிந்த பின், திருமணம் நடக்குமா நடக்காதா என்ற நிலை உருவாகும்போது, அந்த மணப்பெண்ணின் சார்பாக அவரது நண்பர் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையிடம் பேசுவது என்பது, நம் சமுதாயத்தில் அவ்வளவு சாதாரணமாக ஏற்றுக்கொள்ளப்படாத விஷயம். தேவிப்பிரியாவுக்கும் இதே நிலை ஏற்பட்டிருக்கிறது. தேவிப்பிரியாவின் வருங்காலக் கணவரிடம் அவரது நண்பர் ராஜராஜன் பேசி சூழ்நிலையை விளக்கி இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கக் காரணமாக இருந்திருக்கிறார். தேவிப்பிரியா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ராஜராஜன் தொடர்ந்து நல்ல நண்பராக இருந்து வருவது மகிழ்ச்சிக்குரிய விஷயம். இவர்கள் நட்பை மிகவும் ரசித்தேன். தேவிப்பிரியாவுக்கும் அவர் தோழர் ராஜராஜனுக்கும் வாழ்த்துகள்!’’

தேவிப்பிரியாவின் அனுபவம் அடுத்த இதழில் இடம்பெறும்.

போட்டி எண் 13:

என்னால் ஏற்றம்பெற்ற என் குடும்பம்


வெற்றியாளர்: உமா தேவி,

கீழப்பாக்கம், காஞ்சிபுரம்

நடுவர்: வீணா குமாரவேல், ‘நேச்சுரல்ஸ்’ பியூட்டி பார்லர் உரிமையாளர்

‘‘பெண்கள் என்றாலே ஏளனப்பார்வை பார்க்கும் ஆண்களைத் திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்கு, வெற்றிக் கோட்டைத் தொடும் பெண்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களின் பிரதிநிதியாக உமாவைப் பார்க்க வைத்தது, அவர் எழுதியிருந்த அவரின் வாழ்க்கைக் கதை. தன்னம்பிக்கை ஒன்றையே மூலதனமாகக் கொண்டு, தன்னையும் தன் குடும்பத்தையும் ஏற்றம் பெறச்செய்த உமா, மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துகள்!’’

உமா தேவியின் அனுபவம் அடுத்த இதழில் வெளியாகும்.

படங்கள்:பா.ஜெயவேல், பா.காளிமுத்து, என்.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick