கலங்காதிரு மனமே!

ஆட்டிஸம்... மாற்றி யோசிப்போம்!

‘‘ஆட்டிஸம் பற்றிய விழிப்பு உணர்வும், போதிய மருத்துவ அறிவும் பலரிடமும் இல்லை என்பது கவலைக்குரிய விஷயம்’’ என்கிறார், சென்னையைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் டாக்டர் என்.பி.கார்த்திகேயன். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனது லாப நோக்கற்ற சிகிச்சை மையம் (D.O.A.S.T Integrated Therapy Centre for Autism) மூலமாக ஆட்டிஸ பாதிப்புள்ள பல குழந்தைகளுக்கு சிகிச்சையளித்து வருபவர்.

‘‘ஆட்டிஸம் என்பது நோய்போன்ற ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், சமூகப் புரிதலை உணர முடியாததால் பேச்சு, செயல்கள் அனைத்திலும் தனித்துத் தெரிவர். அவர்களின் மூளை, தகவல்களைப் புரிந்துகொள்ள மறுப்பதுதான் பிரச்னைக்குக் காரணம். சிகிச்சை முறைகளுக்கான ஆய்வுகள் பெருகி வருவதால், நிச்சயமாக ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விடியல் வரும்’’ என்று நம்பிக்கை தரும் டாக்டர் கார்த்திகேயன், ஆட்டிஸத்தின் அறிகுறி, இந்தியாவில் ஆட்டிஸத்தின் நிலை, ஆட்டிஸக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கான ஆலோசனை என, ஆட்டிஸம் பற்றி மார்ச் 1 முதல் 7 வரை, ‘கலங்காதிரு மனமே’ குரல் வழியில், பல விஷயங்களைப் பகிர்கிறார். 044- 66802912* என்ற எண்ணில் அழையுங்கள்! *சாதாரண கட்டணம்

ச.சந்திரமௌலி, படம்:சொ.பாலசுப்ரமணியன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick