என் டைரி - 375

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சைக்கோ காதல்... தடுமாறும் வாழ்க்கை!

நான் ப்ளஸ் டூ படித்துக்கொண்டிருந்தபோது, எங்கள் வீட்டின் எதிரில் குடியிருந்த தூரத்து அத்தையின் மகன் என்னை விரும்புவதாகக் கூறினார். எனக்கும் அவரைப் பிடித்திருந்தது. இருவரும் காதலித்தோம். ஆனால், நான் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்தபோது, அந்தக் காதலே எனக்குக் கைவிலங்கு ஆனது.  ‘இந்த டிரெஸ் போடக் கூடாது’ என்பதில் ஆரம்பித்து, ‘நீ இப்படி தலைசீவுறது எனக்குப் பிடிக்கல’ என்பதுவரை எனக்குப் பல கட்டுப்பாடுகள் விதித்தார். நாட்கள் செல்லச் செல்ல, என் விருப்பங்களுக்கு, சுதந்திரத்துக்கு `காதல்' என்ற பெயரில் விலங்கிட்டார். 

ஒரு கட்டத்தில், அவர் சந்தேகங்கள் என்னை நிலைகுலையச் செய்தன. கல்லூரி முடிந்து நான் வீடு திரும்பும்வரை எனக்கே தெரியாமல் என்னைப் பின்தொடர்வது, தோழிகளுடன் காபி ஷாப், மால் என்று நான் எங்கு சென்றாலும் அங்கு வந்து கண்காணிப்பது என்று கீழ்த்தரமான வேலைகளில் இறங்கினார். ஒருவேளை ‘நீ அங்கே எல்லாம் போகாதே’ என்று சொல்லியிருந்தாலோ, ‘நானும் உங்கூட வர்றேன்’ என்று சொல்லியிருந்தாலோகூட பரவாயில்லை என்றிருப்பேன். இந்தக் காரணத்தால் எங்களுக்குள் சண்டைகள் பெருகின. காதல் கசக்க, ‘நீயும் வேண்டாம்... உன் லவ்வும் வேண்டாம்’ என்று அவரிடம் இருந்து விலகினேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்